இஸ்மாயில்புர எரிப்புச்சம்பவத்திற்கு தனிப்பட்ட தகராறே காரணம்! மதமாற்றம் அல்ல: சில ஊடகங்கள் ஊதிக்கெடுத்தன

அண்மையில் இடம்பெற்ற இஸ்மாயில்புர வீடெரிப்புச் சம்பவத்திற்கு தனிப்பட்ட தகராறே காரணமாகும். தவிர மதம்மாறாமைக்காக வீட்டை எரித்தது என்று கூறியது பச்சைப்பொய். ஒருசில ஊடகங்கள் ஊதிக்கெடுத்தன.

இவ்வாறு சம்மாந்துறைப் பிரதேசசபையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உபதவிசாளர் வி.ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

குறித்த ஊடகமாநாடு இன்று (11)செவ்வாய்க்கிழமை பகல் பிரதேசசபையின் கூட்டமண்டபத்தில் நடைபெற்றது.

அங்கு உபதவிசாளர் வி.ஜெயச்சந்திரன் உறுப்பினர்களான என்.கோவிந்தசாமி அ.அச்சுமொகமட் சிரேஸ்ட்ட சட்டத்தரணி எம்.ஜஎம்.முஸ்தபா யுசுப்லெவ்வை ஏசிஎம். சஹீல் ஆகியோர் சமுமளித்திருந்தனர்.

இன்று சம்மாந்துறைப் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு சபைத்தவிசாளர் எ.எம்.எம். நௌசாட் தலைமையில் காலை நடைபெற்றது. அக்கூட்டத்தில் இஸ்மாயில்புரசம்பவம் தொடர்பாக எமதுசபை ஊடகமாநாடொன்றை நடாத்தி மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் அமர்வின்பின்னர் இந்த ஊடகமாநாடு பகல் நடைபெற்றது.


அங்கு உபதவிசாளர் ஜெயச்சந்திரன் மேலும் கூறுகையில்:

சம்மாந்துறைப்பிரதேசபைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரத்தில் வீடும் ஆட்டோவும் எரியூட்டப்பட்டமை உண்மைதான். ஆனால் அது பலவந்தமான மதமாற்றத்திற்கானது அல்ல. நான் அந்த வளத்தாப்பிட்டியைச்சேர்ந்தவன்தான். உபதவிசாளராக இருக்கிறேன்.
அங்கு நாம் சென்று பூரணமாக விசாரித்தபோது உண்மை வெளிவந்தது.

அங்கு யாரும் அவரையோ அவரது குடும்பத்தையோ மதம் மாறச் சொல்லவில்லை. அவருக்குத்தேவை புதிய ஆட்டோ. அதற்காகவே இந்த நாடகம்.
இரு இனங்களையும் மூட்டிவிடுகின்ற நாடகம் அரங்கேறியிருக்கிறது. அதற்கு ஒருசில ஊடகங்கள் குறிப்பாக வெளிநாட்டு ஊடகங்கள் தீனிபோட்டுள்ளன. இச்சம்பவத்தை இனவாதமாக்கி ஊதிப்பெருப்பித்துள்ளன.

ஆனால் இஸ்மாயில் புரத்தில் இன்றும் தமிழ் முஸ்லிம் மக்கள் உறவாகவே உள்ளனர். எனவே இச்சம்பவத்திற்காக அந்த நபர் சொன்ன மதமாற்றம் என்பது வெறும் பொய்.

நான் அவரிடம் நேற்று விசாரித்தேன். நீ ஏன் இவ்வாறு பொய் சொன்னாய் ? யார் மதம் மாறச்சொன்னது? என்று கேட்டபோது எனக்கு ஜீவாதாரத்திற்கான புதிய ஆட்டோவைப் பெற்றுத்தந்தால் நான் சொன்னதை வாபஸ் வாங்குவேன் என்றார். எனவே இது முழுமுழுக்க உண்மைக்குப் புற்ம்பான செய்தி என்றார்.

உறுப்பினர் எ.அச்சிமொகமட் கூறுகையில்:

தமழ் முஸ்லிம் மக்கள் பழையதை மறந்து இன்று அந்நியோன்யமாக வாழ்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் இவர் தனிப்பட்ட சுயலாபத்திற்காக இரு இனங்களையும் மீண்டும் மூட்டிவிடுகின்ற செயலைச் செய்துள்ளார்.
அந்தச்செய்தியைப் பாக்கின்ற தமிழ்மக்கள் நிச்சயமாக முஸ்லிம் மக்கள் மீது ஆத்திரமடையத்தான் செய்வார்கள்.

ஆனால் நடந்ததோ வேறு. அண்மையில் தமிழ்த்தந்தியிலும் உண்மையை ஆராயாமல் இச்சம்பத்தை எழுதியுள்ளார்கள். ஊடகங்கள் பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும்.
இலங்கையின் பழம்பெரும் தம்pழ் தேசியப்பத்திரிகைகள் இச்செய்தியை வெளியிடவில்லை. உள்ளுர் ஊடகவியலாளர்ளுக்கு நன்றிகள் பாராட்டுக்கள். என்றார்.

உறுப்பினர் நா.கோவிந்தசாமி கூறுகையில்:
அவரது தனிப்பட்ட பிணக்குகாரணமாக ஊடகமொன்றிற்கு பிழையான முற்றிலும் பொய்யான செய்தியை வழங்கி குழப்பியுள்ளார். பொலிசார் அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.என்றார்.

vt 2

vt 2

vt 2

vt 2

vt 2

vt 2

vt 2

(காரைதீவு நிருபர் சகா)

அதிகம் வாசித்தவை

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.