வெல்லாவெளியில் காட்டுயானையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் யானைவேலி அமைக்க நிதி ஒதுக்கீடு

வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் யானை வேலி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பிரதேச செயலாளர் செல்வி.ஆர் ரகுலநாயகி தெரிவித்தார்.


வெல்லாவெளி பிரதேசசெயலாளர் யானைவேலி அமைப்பது விடயமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்:-உலக வங்கியின் நிதியொதுக்கீட்டின் "விவசாய நவீன மயமாக்கல்" திட்டத்தின்மூலம் விவசாய கிராமங்களை பாதுகாத்தல் மூலம் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வனவல பாதுகாப்பு திணைக்களமும்,வெல்லாவெளி பிரதேச செயலகமும் இணைந்து யானைவேலியை அமைப்பதை நடைமுறைபடுத்தவுள்ளது.

வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் செவ்வாபுரம் கிராம சேவையாளர் பிரிவிலிருந்து மாலையர் கட்டு கிராம சேவையாளர் பிரிவு வரை இருபத்திரெண்டு (22) கிலோ மீற்றர் தூரத்திற்கு ரூபா15 மில்லியன் ரூபா செலவில் யானை வேலி அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வனவள திணைக்கள அதிகாரிகள் மதிப்பீட்டறிக்கை மீளாய்வு செய்ய வேண்டும்; என்றும் வேலி அமைப்பதற்குரிய பொருட்கள் இல்லை என காரணம் காட்டுவதாக காணி பயன்பாட்டு திட்டமிடல் தும்பங்கேணி கிராமத்துக்கான கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற போது கருத்து முன்வைக்கப்பட்டது. நிகழ்வில் அனைத்து திணைக்கள அதிகாரிகள் பங்கு பற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வருடம் வேலையை ஆரம்பிக்க முதற்கட்டமாக 5 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் இந்த மாதத்திற்குள் மாத்திரம் இரண்டுபேர் யானை தாக்கி பலியாகியுள்ளமையும் யாவரும் அறிந்த விடயம். இவ்விடயம் தொடர்பாக உரியவர்கள் விரைவாக செயற்பட்டு குறுகிய காலத்தில் யானை வேலி அமைத்து யானை தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என கலந்து கொண்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

(க. விஜயரெத்தினம்)

அதிகம் வாசித்தவை

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

 • May 08 , 2018

  எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.