சவளக்கடையில் மோட்டார் சைக்கிள், பயணிகள் போக்குவரத்து பஸ்ஸிம் நேருக்கு நேர் மோதி விபத்து ; ஆசிரியர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழப்பு.மனைவி காயம்

சவளைக்கடை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெரியநீலாவணை கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.அவரது மனைவியும் படுகாயமடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை(10.9.2018) காலை 7.15 மணியளவில் சவளைக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி-சவளைக்கடை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பெரியநீலாவணை முதலாம் குறிச்சியை சேர்ந்த ஞானமுத்து -ஜெயந்தசீலன்(வயது-41)எனும் ஆசிரியரே இவ்வாறு ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.தனது சொந்தவூரான பெரியநீலாவணை கிராமத்தில் இருந்து கிட்டங்கி வீதியின் ஊடாக மண்டூர் மகாவித்தியாலயத்திற்கு கடமைக்கு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.இதன்போது எதிரே வந்தே பயணிகள் போக்குவரத்து பஸ் இவரை மிதித்து சென்றுள்ளது.இதன்போது ஆசிரியர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் தனது மனைவியான ஆசிரியையும் காயமடைந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

காயமடைந்தவரையும்,உயிரிழந்தவரின் சடலத்தையும் பொலிசார் மீட்டெடுத்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.இது சம்பந்தமாக சவளைக்கடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க. விஜயரெத்தினம்)

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.