இன்று ஆரம்பமாகவுள்ள பிரசித்திபெற்ற வெருகல் முருகனாலய கொடியேற்ற உற்சவம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று திங்களன்று 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய மஹோற்சவத்தையொட்டி கடந்த 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய பாதயாத்திரை 08தினங்கள் தொடர்ச்சியாக பயணித்து இன்று (09) ஞாயிற்றுக்கிழமை வெருகலம்பதியைச் சென்றடையவுள்ளது.

பாதயாத்திரையில் சுமார் 50பேரளவில் பயணித்துள்ளனர்.அவர்கள் கடந்த 8 தினங்களில் தரிசித்த ஆலயங்கள்தோறும் பஜனை பாடி சிரமதானம் செய்து பாதயாத்திரையை மேற்கொண்டுவந்தார்கள்.

நேற்று (8) சனிக்கிழமை கதிரவெளி ஸ்ரீ திருச்செந்தூர் முருகனாலயத்தில் தங்கி இன்று(9) காலை வெருகலம்பதியைச் சென்றடைவர்.

காரைதீவிலிருந்து வேல்சாமி மகேஸ்வரன் தலைமையிலான பாதயாத்திரையை வழமைபோல் இம்முறையும் காரைதீவு ஸ்ரீ நந்தவனப் பிள்ளையார் கதிர்காம பாதயாத்திரீகர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(காரைதீவு நிருபர் சகா)

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.