அம்­பாறை மாவட்­டத்­தி­ல் கடும் வரட்சி கார­ண­மாக, சுமார் 20,338 பேர் பாதிப்பு

கடும் வரட்சி கார­ண­மாக, அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள 6 பிர­தேச செய­லாளர் பிரி­வு­களைச் சேர்ந்த சுமார் 20,338 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சின் அம்­பாறை மாவட்ட மத்­திய நிலை­யத்தின் உதவிப் பணிப்­பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரி­வித்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பௌஸர் மூலம் குடிநீர் விநி­யோ­கிக்­கப்­பட்டு வருகின்றது.

அம்­பாறை மாவட்­டத்தில் தற்­போது நிலவும் வரட்சியான கால நிலை­யினால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களின் தொகை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றது.

தற்­போது பொத்­துவில், திருக்­கோவில், ஆலை­ய­டி­வேம்பு, நாவி­தன்­வெளி, தமண, லாகு­கல ஆகிய 6 பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளி­லுள்ள சுமார் 6,248 குடும்­பங்­களைச் சேர்ந்த சுமார் 20,338 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

பாதிக்­கப்­பட்ட பிர­தேச மக்­க­ளுக்கு பிர­தேச செய­ல­கங்­க­ளி­னூ­டாக குடிநீர் வினி­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சின் நிதி ஒதுக்­கீட்டில், பிர­தேச செய­ல­கங்கள் இப்­ப­ணியை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றன.

வரட்சிப் பிர­தேச மக்­களின் தேவைக்­கேற்ப பௌஸர் மூலம் குடிநீர் வினி­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இப்­ப­ணிக்கு உள்­ளு­ராட்சி சபை­களும் நிறை­வான ஒத்­து­ழைப்பு நல்கி வரு­கின்­றன.

இதே­வேளை, வரட்சி கார­ண­மாக கிழக்கு மாகாணத்;திலுள்ள பெரிய, சிறிய குளங்கள், ஆறுகள், ஏரிகள், நீர்­நி­லைகள் என்­ப­ன­வற்றின் நீர்­மட்டம் வெகு­வாகக் குறைந்து வரு­வ­தாக அதி­கா­ரிகள் குறிப்­பி­டு­கின்­றனர்.

வரட்சி கார­ண­மாக காட்டு மிரு­கங்­களும் குடி­நீ­ரின்றிப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

தற்­போ­தைய வரட்சிக் கால­நிலை தொட­ரு­மானால், எதிர்­வரும் பெரும்­போக நெற்செய்கை வெகு­வாகப் பாதிக்­கப்­படும் என அம்­பாறை மாவட்ட விவ­சா­யிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

வரட்சி கார­ண­மாக, அம்பாறை மாவட்டத்தில் இம்முறை சிறுபோகத்தின் போது, மட்டுப்படுத்தப்பட்டளவு காணிகளிலேயே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அறுவடைப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • Apr 18 , 2018

  2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.