வயல் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து வயோதிபர் மரணம்

திருகோணமலை, இலுப்பைக்குளம் வயல் பகுதியில் கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து வயோதிபரொருவர் நேற்று (10) மாலை உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் நிலாவெளி, இலுப்பைக்குளம், 08ம் வட்டாரத்தைச் சேர்ந்த வடிவேல் யோகராஷா (56வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- வழமை போன்று வீட்டிலிருந்து காலை நேரத்தில் மாடுகளை மேய்ப்பதற்காக செல்வதாகவும் மாலையாகியும் வீட்டுக்கு வராதமையால் அவரை தேடி அவரது மனைவியான விஜயலட்சுமி சென்றதாகவும் இதேநேரம் வயலுக்குள் இருந்த பெக்கோவால் தோண்ணப்பட்ட கிணற்றடியில் அவரது பாதணியும், குடிப்பதற்கு வழமையாக கொண்டு செல்கின்ற தண்ணீர் போத்தலும் காணப்பட்டது.

இதனையடுத்து கிணற்றை பார்த்த போது வீழ்ந்து கிடப்பதை அவதானித்ததாகவும், அயலவர்களை அழைத்து கிணற்றிலிருந்தவரை மீட்டதாகவும் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கினர்.

அத்துடன் மரணத்தில் எதுவித சந்தேகமும் இல்லையென அவரது மனைவி, உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து நிலாவெளி பொலிஸாரும், திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமியும் விசாரணையை முன்னெடுத்தனர்.

இதில் பெறப்பட்ட வாக்குமூலங்களில் எதுவித மாற்று கருத்துக்களும் தெரிவிக்கப்படாததையடுத்து மரணத்தை மனைவியிடம் ஒப்படைத்ததாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

(அப்துல் சலாம் யாசீம்)

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.