மண்முனை மேற்கில் தலைமைத்துவ பயிற்சியினை பூர்த்தி செய்த இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

“இளையவர்கள் சமூக பொறுப்பாளராகும் ” கருப்பொருளில் இளைஞர்களுக்கு சமூகம் தொடர்பாக ஒழுங்கமைப்புவலிமை, படைப்பாற்றலை வளர்ச்சி செய்யும் முகமாக கருத்திட்ட முகாமைத்துவ இளைஞர்விவகார மற்றும்

தெற்கு அபிவிருத்தி அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரனையில், மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி செல்வன் கணேசமூர்த்தி சசீந்திரன் ஒழுங்கமைப்பு மற்றும் ஏற்பாட்டில் இளைஞர் பயிற்சி முகாம் குறிஞ்சாமுனை அ.த க பாடசாலையில் மூன்று நாள் வதிவிடமாக நடைபெற்றது.

 

இந்த மூன்று நாள் வதிவிட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவைச்சேர்ந்த 85 இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

சான்றிதழ் வழங்கும் இறுதி நிகழ்வில் கெளரவ ஞா.சிறிநேசன் பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு மேற்கு வலய பிரதி கல்விப்பணிப்பாளர் எஸ்.சுரனுதன், வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஜெகன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி அருள்நாயகம் தர்ஷிக்கா, மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவரும், தேசிய சம்மேளன உறுப்பினருமான ரி.விமலராஷ் ஆகியோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் தமது ஆற்றல் மற்றும் திறமைகளை அன்னியொன்னியமாக அறிந்து கொள்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், இளைஞர்களின் தலைமைத்துவம், ஆளுமை வளர்ச்சிக்கும் மன அழுத்தத்தை குறைத்துக்கொள்வதற்க்காக இடர் முகாமைத்துவம், இசையும் இரசனையும், நிபுணத்துவ அனுபவ பகிர்வு, முரண்பாடு தீர்த்தல்( மோதல் முகாமைத்துவம்) , மென் திறன் விருத்தி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக இந்த பயிற்சி முகாமில் வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ma 1

ma 1

ma 1

ma 1

ma 1

ma 1

ma 1

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.