வாழைச்சேனையில் இரு கைதிகள் தப்பி ஓட்டம்

மட்டக்களப்பு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படும் போது தப்பி சென்ற கைதிகள் இருவரில் ஒருவர் ஒரு சில மணி நேரத்தில் சிறை அதிகாரிகளினால் மடக்கிபிடிக்கப்பட்டுள்ளார்.

மற்றையவரை தேடும்பணி தொடர்கின்றது.

போதை வஸ்த்து மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து இருவரும் வாழைச்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்

மீண்டும் இன்று வியாழக்கிழமை குறித்த சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த வேளை அவர்கள் மீதான விளக்கமறியல் காலத்தை இம்மாதம் 23 ஆம் திகதி வரை நீடித்து வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

நீதிமன்றம் கலைந்த பின்பு கைதிகளை சிறைச்சாலை வாகனத்தில் ஏற்ற தயாரானபோது குறித்த இரு கைதிகளும் தங்கள் கைவிலங்கினை அகற்றிவிட்டு இரு வேறு திசைகளில் தப்பி ஓடியுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் தரப்பு தகவல்களின்படி தப்பி ஓடிய கைதிகளில் ஒருவர் அந்தப்பகுதியில் வீடு ஒன்றில் மறைந்திருந்த வேளை ஓரிரு மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றவர் தேடப்பட்டு வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.

pr 2

pr 2

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.