கல்முனை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களின் நலன் கருதி கிளினிக் சேவை நேரம் அதிகரிப்பு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களின் நலன் கருதி கிளினிக் சேவை நேரம் அதிகரிக்கப்ட்டுள்ளது. இதனால் கிளினிக் வைத்திய சேவை பெறுவதற்காக வரும் நோயாளர்கள் பெரும் நன்மையடையவுள்ளனர்.

கல்முனைஆதாரவைத்தியசாலையின் கிளினிக் (சாய்சாலை) பிரிவில், நோயாளர்கள் மிக அதிகளவில் வரும் நேரங்களிலும், நோயாளிகளின் சொந்த அவசர வேலை நிமிர்த்தம் நேரமின்மை காரணமாகவும், மருந்து பெறுவது ஓர் கடின வேலையாக இருந்தமையை கருத்திற் கொண்டு, வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரன் அவர்களினால் மருந்து வழங்கும் சேவை நேரம் பொதுமக்களின் வேண்டுகோள் காரணமாகவும், அவர்களின் நன்மை கருதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்கின் பிரகாரம் வாரநாட்களில்
காலை 8.00 இருந்து இரவு 8.00 வரையும்.
சனி/ஞாயிறு/பொது விடுமுறை நாட்களில்
காலை 8.00 இருந்து பிற்பகல் 4.00 வரையும்.
மருந்து வழங்கல் சேவை நடைபெறவுள்ளது.

வெளி நோயாளர் பிரிவில் இச் சேவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளதும், இச் சேவையினால் பல மக்கள் நன்மை பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கிளினிக் பிரிவிலும் இச் சேவை நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது
இதற்கான ஒழுங்குகளை நடைமுறைப்படுத்த, வைத்திய அத்தியட்சகர் அவர்கள் பிரதம மருந்தாளரிடம் பொறுப்பளித்துள்ளார்.

இச் சேவையும் இப் பிரதேச மக்கள் இவ் வைத்தியசாலையினால் பெறும் நன்மைகளின் வரிசையில் முக்கியத்துவம் பெறுகிறது.

வைத்தியர்களினால் பார்வையிடப்பட்ட சேவைநாடிகள் தங்களின் அவசர தேவை காரணமாக வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டாலும், மீண்டும் வந்து இரவு 8.00 மணிவரை மருந்துகள் பெறும் சேவைவாய்பினை பெறக்கூடியதாகவுள்ளமை மிக பயனுள்ளதாகும்.

நோயாளர்களின் நலன் கருதி வைத்தியசேவையை முடிந்தளவு மக்களுக்கு வழங்க வைத்தியசாலை நிருவாகம் மேற் மேற்கொள்ளும் இவ்வாறான மாற்றங்கள் இச் சேவையை நடைமுறைப்படுத்திய வைத்தி அத்தியட்சகர் அவர்களின் சேவை, ‘மக்கள் சேவை’ என கிளினிக் சேவைநாடிகள் கருத்து தெரிவித்தனர்.

20180809 101934

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.