மட்டு போதனா வைத்தியசாலையில் வைத்தியர் போல் வேடமிட்டு கொள்ளை

வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கிளினிக்(பரிசோதனை) சென்ற கர்ப்பிணித்தாய் ஒருவரிடம் அங்கு பயிற்சி வைத்தியர் போல் வேடமிட்டு வந்த பெண் ஒருவர் அவரிடமிருந்த தாலிக்கொடி, மாலை, காப்பு உட்பட 19 பவுண் தங்கநகையை அபகரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது…
மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த கர்ப்பிணித்தாய் தனது மாதாந்த பரிசோதனைக்காக வியாழக்கிழமை மட்டு போதனா வைத்தியசாலைக்கு தனது கணவருடன் சென்றுள்ளார். குறித்த கர்ப்பிணிப்பிணியின் கணவர். மனைவியை வைத்தியசாலையின் வெளியே இறக்கிவிட்டு அவருக்காக மருந்து எடுக்கச்சென்றுள்ளார். இந்நிலையில் உள்ளக பயிற்சி வைத்தியர் போல் வேடமிட்ட பெண்ணொருவர். குறித்த கர்ப்பிணியிடம் பேச்சுக்கொடுத்துள்ளதுடன். இன்று உங்களுக்கு ஸ்கேன் எடுக்க இருப்பதாகக்கூறி அவர் கையில் வைத்திருந்த 4ஆம் இலக்கம் பொறிக்கப்பட்ட துண்டு ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் அவரை கதிரை ஒன்றில் அமரச்செய்துள்ளார்.

கர்ப்பிணியை பரிசோதிப்பது போல் பரிசோதித்த பெண் தங்போது ஸ்கேன் எடுக்கவிருப்பதால் கழுத்தில், கையில் கிடக்கும் நகைகளை கழற்றுமாறு கூறி ஸ்கேன் எடுத்துவரும் வரை தான் வைத்திருப்பதாக கூறி தனது பையில் வைத்துள்ளார். அதன் பின்பு குறித்த கர்ப்பிணியை வைத்தியசாலையிலுள்ள அறை ஒன்றைக்காட்டி அதற்குள் செல்லுமாறு தான் பின்னால் வருவதாகவும் கூறியுள்ளார். கர்ப்பிணிபெண் அவர் காட்டிய அறைக்குள் நுழைந்தவுடன். வைத்தியர்போல் வேடமிட்டிருந்த பெண் நகைகளுடன் வெளியே ஓட்டமெடுத்துள்ளார்.

அதன் பின்பே குறித்த கர்ப்பிணிப்பெண் தான் ஏமாற்றப்பட்டுள்ளதையும், தனது நகைகள் பறிபோயுள்ளதையும் உணர்ந்து அழுது புலம்பியுள்ளார். வைத்தியசாலைக்குள்ளே பயிற்சி வைத்தியர்போல் வேடமிட்டு நோயாளியிடம் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தற்போது மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான நுதனதிருட்டுக்கள் இடம்பெற்றுவருவதால் பொதுமக்களை விழிப்புடன் செயற்படுமாறு பாதிக்கப்பட்டோர் கோரிக்கைவிடுக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.