புல்லுமலை தண்ணீர் தொழிட்சாலைக்கு எதிராக நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கரடியனாறு பொலீஸ் பிரிவிற்க்குட்பட்ட புல்லுமலை பிரதேசத்தில் தண்ணீர் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்த போதிலும் இத் தொழிற்சாலை அமைப்பதை தடுக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகின்றது.

இத்தொழிற்சாலை அமைப்பதன் மூலம் அவ்பிரதேசத்தில் உள்ள நிலத்தடி நீர் உறிஞ்ச படுவதனால் எதிர்காலத்தில் அப்பிரதேசம் பாலைவனமாகும் நிலை ஏற்ப்படும் என்ற ஐயத்தில் பொதுமக்கள் காணப்படுகின்றனர். பல்வேறு வழிகளிலும் பொதுமக்கள் இதற்க்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு சுதந்திர கட்சியின் காத்தான்குடி நகரசபை தவிசாளர் இதற்க்கு ஆதரவு வழங்குவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் தொழிற்சாலைக்கு எதிராக அப்பிரேதச பொதுமக்கள் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பல வழிகளிலும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது இவ்வாறு இருக்க இத்தொழில்சாலை அமைப்பதற்கு காத்தான்குடி சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவது மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தொழிற்சாலையை நிறுத்துவதற்க்கும் இதன் விளைவுகளை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்த நாளை 9.08.2018 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு புல்லுமலை தண்ணீர் தொழில்சாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.