அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை ஒழிக்கும் நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை ஒழிக்கும் பொருட்டு அம்பாறை விசேட போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ்குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபகாலமாக அம்பாறைமாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. கூடுதலாக கேரளா கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகியபிரதேசங்களில் கஞ்சாவிற்பனையில் ஈடுபட்ட சிலர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டும் இருந்தனர்.

இதேவேளை சட்டவிரோத சாhhய விற்பனையிலும் பலர் ஈடுபட்டுவருகின்றனர். அதிகமாக அம்பாறைமாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் குடும்பங்களில் பிணக்குகளும், சமூகவிரோதச் செயல்களும் இடம்பெற்றுவருவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா மற்றும் மதுபான விற்பனைகளில் ஈடுபவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்குமாறுகேட்டுள்ளனர். கிராமமட்டத்தில் பொலிஸாருடன் இணைந்து சிவில்பாதுகாப்புக்குழுவினரும் மற்றும் சமூக ஆர்வலர்களும் இணைந்து குற்றச்செயல்களை ஒழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(செ.துஜியந்தன்)

அதிகம் வாசித்தவை

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • May 08 , 2018

  எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.