மட்டு.சிவானந்தா, விவேகானந்தா பழைய மாணவர்களினால் பொருளாதாரக்குறைவுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு சிவானந்தா,விவேகானந்தா மாணவர் ஒன்றியத்தினால் பொருளாதாரக்குறைவுள்ள மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலை மாணவர்களின் கல்வி சார் நடவடிக்கைகளுக்காக ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்கள் இவ் மாணவர் ஒன்றியத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.

 

இது தொடர்பான விசேட வைபவம் இவ் அமைப்பின் புலம்பெயர் நாடுகளின் கிளைத் தலைவர் தி.றோகான் தலைமையில் வெள்ளிக்கிழமை(20.7.2018) நடைபெற்றது.

இதன்போது இவ் அமைப்பின் உறுப்பினர்களின் தந்தையர்களினால் குறித்த இலவச பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.தி.றோகான் சிறப்புரையாற்றுகையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான எமது அமைப்பு பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றதாகவும், முழுக்க முழுக்க கல்வி சார் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தங்களின் அமைப்பு மட்டக்களப்புக்குள் குறிக்கப்பட்ட பகுதியில் தங்களின் சேவை இடம்பெற்றதாகவும்,அதனை இந்த ஆண்டு மட்டக்களப்பு மேற்கு வலய மாணவர்களுக்கும் இந்த உதவித்திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இவ் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

வலயக் கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் சே.மகேந்திரகுமார் உரையாற்றுமையில் மட்டக்களப்பு மேற்கு வலய மாணவர்களது 2017ம் ஆண்டு கல்விப் பொது தராதர சாதாரணதர அடைவு மட்டத்தின் அடிப்படையில் 98ஆவது இடத்தில் இருந்த மேற்கு வலயம் தற்போது 93ஆவது இடத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் இதை விடவும் இவ்வலயத்தை கல்வியில் முன்னுக்குக் கொண்டுவர முடியும் எனக் குறிப்பிட்டார்.

இவ் வைபவத்தில் சிவானந்தா விவேகானந்தா மாணவர் அமைப்பின் செயலாளர் எஸ்.ரகுகரன்,பொருளாளர் கே.யசோதாரன், மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

eq 1

eq 1

eq 1

(செட்டிபாளையம் நிருபர்-க.விஜயரெத்தினம்)

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.