56நாட்களின் பின்னர் நேற்று வேல்சாமி பாதயாத்திரைக்குழுவினர் கதிர்காமத்தைச் சென்றடைந்தனர்

யாழ்.சந்நதியிலிருந்து மே மாதம் 17ஆம் ததிகதி ஆரம்பித்த வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைக்குழுவினர் நேற்று(12) வியாழக்கிழமை காலை 6.15 மணியளவில் கதிர்காமத்தைச் சென்றடைந்தனர்.

56நாட்கள் 98ஆலயங்களைத்தரிசித்து 3மாகாணங்களையும் 7மாவட்டங்களையும் கடந்து நடந்து கதிர்காமத்தை 20வது வருடமாகச்சென்றடைந்துள்ளார்.

அவருடன் நேற்றுக்காலை சுமார் 3000பேரளவில் சென்றடைந்துள்ளனர். இன்றைய கொடியேற்றத்தைக்கண்டு பெரும்பாலானோர் வீடு திரும்புவர். சிலர் தீர்த்தம்வரை அங்கு தங்கியிருந்துதான் திரும்புவர்.

வேல்சாமி அங்கிருந்து தகவல் தெரிவிக்கையில்:

இம்முறை பயணம் திருப்தியாகவிருந்தது. இடையிடையே சிறுமழை.காட்டுப்பாதையில் அடியார்களுக்கு நீர்வசதி உள்ளிட்ட வசதிகள் நன்றாக செய்யப்பட்டிருந்தன.
காட்டுப்பாதை 9நாட்களுக்கு முன்னதாகத் திறந்துவிடப்பட்டமையால் நாம் வியாழையில் 3தினங்கள் தரித்துநிற்கவேண்டியதாயிற்று. அதனால் கொண்டுசென்ற உணவுப்பொருட்கள் தீர்ந்துவிட்டன. ஒருவாறு சமாளித்தோம்.

கள்ளவியாழையில் வழமைபோல் அனனதானம் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் கட்டகாமத்தில் இல்லை.
வீரச்சோலையில் ஆயிரக்கணக்கில் அடியார்கள் தங்கியிருந்தும் அங்கு போதுமான அடிப்படைவசதி இல்லை. 03 மலசலகூடங்கள் மாத்திரமே உள்ளன. தண்ணீர்வசதியும் போதுமானதாக இல்லை.
சில இளைஞர்யுவதிகளின் நடத்தைகள் திருப்பதிகரமாகஇல்லை.

இவ்வசதியீனங்கள் தொடர்பாக இந்துகலாசார அமைச்சிற்கு எழுத்துமூலம் அறிவிக்கவுள்ளேன்.என்றார்.

kmk 2

kmk 2

காரைதீவு நிருபர் சகா

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.