குரங்கு மற்றும் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு கோரி போராட்டம்

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை, கிண்ணையடி, சுங்காங்காங்கேணி ஆகிய பிரதேசங்களில் குரங்கு மற்றும் யானை தொல்லை அதிகமாக காணப்படுவதாகவும்,

அவற்றினை குறித்த பிரதேசங்களில் இருந்து அகற்றி தருமாறு கோரி பிரதேசத்தின் பொதுமக்கள் இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூகபற்றாளர் முனிதாஸ் சிறிகாந் என்பவரின் தலைமையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வாழைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை ஆகிய அரச திணைக்களங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது குரங்கு தொல்லையில் இருந்து வீடு உடமைகள் பயிர்செய்கை தோட்டம் என்பனவற்றினை காப்பாற்றி தாருங்கள், வேண்டும் வேண்டும் தீர்வு வேண்டும், குரங்கு பிரச்சனைக்கு நல்ல முடிவு வேண்டும், இறுதியாக எமக்கு தங்களிடமிருந்து இறுதியான தீர்வு தேவை, குரங்கு மற்றும் யானைகளிடம் இருந்து எங்கள் தோட்டங்களை காப்பாற்றுங்கள், யானைகளிடம் இருந்து எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் கலந்து கொண்டனர்.

முதலில் வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் அங்கிருந்து வாழைச்சேனை பிரதேச சபையை நோக்கி சென்று பிரதேச சபைக்கு முன்பாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் அ.தினேஸ்குமாரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்த போது மகஜரை பெற்றுக் கொண்ட செயலாளர் குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்! அடிக்கடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர்களினால் முன்வைக்கப்பட்ட விடயமாகும். இதற்கான தீர்வு அபிவிருத்தி குழு கூட்டத்தில் எட்டப்படட்டதாகும். இருந்த போதிலும் இது விடயமாக பிரதேசத்தின் வனஜீவராசிகள் திணைக்களத்தில் அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் வி.வாசுதேவனிடம் மகஜர் கையளிக்கபட்ட போது குறித்த விடயம் சம்பந்தப்பட்ட திணைக்களமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே குறித்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

ele 2

ele 2

ele 2

ele 2

ele 2

ele 2

ele 2

ele 2

ele 2

(முர்ஷிட்)

அதிகம் வாசித்தவை

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.