புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தயாரிப்பு நிலையத்தின் அமைப்பு பணியை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தி கித்துள் பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கித்துள் பொதுச்சந்தைக்கு முன்பாக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்,சாரதா மகளிர் அமைப்பு,நகோமி பெண்கள் அமைப்பு என்பன இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதில் புல்லுமலை நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் புல்லுமலை தொழிற்சாலைக்கு எதிரான இயற்கை வளங்களை அழிக்காதே நிலத்தடி நீரை உறிஞ்சி விற்காதே குடிப்பதற்கு தண்ணீர் இல்லை விற்பதற்கு அனுமதி வழங்கியது யார்? போன்ற வாசகங்கள் அடங்கியபதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தண்ணீர் போத்தல் தொழிற்சாலையினை தடுத்து நிறுத்துமாறு பல்வேறு போராட்டங்களை நடாத்தியபோதிலும் இதுவரையில் குறித்த தொழிற்சாலையினை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

புல்லுமலை உட்பட அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினையும் குடிநீரையில் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படும் குறித்த தொழிற்சாலை தமது பகுதிக்கு தேவையில்லையென இங்கு மக்கள் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சிவானந்தன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

சுற்றாடல் துறைக்கு ஜனாதிபதி பொறுப்பாக உள்ள நிலையில் ஜனாதிபதி இதில்தலையிட்டு இந்த தொழிற்சாலையினை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

pl 2

pl 2

pl 2

pl 2

(வா.கிருஸ்ணகுமார்)

அதிகம் வாசித்தவை

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

 • May 08 , 2018

  எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.