காரைதீவு விபுலாநந்தசதுக்கத்திலுள்ள சர்ச்சைக்குரிய காணி வழக்கை விசாரிக்க இரு தினங்கள் விசேடமாக ஒதுக்கீடு

காரைதீவு விபுலாநந்தசதுக்கத்திலுள்ள   சர்ச்சைக்குரிய  காணி தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு கல்முனை மாவட்ட நீதிமன்றம் இரு தினங்களை விசேடமாக ஒதுக்கியுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் இவ்வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது.
 
இந்த வழக்கு கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(6) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி பயாஸ் ரஸ்ஸாக் இந்த அறிவித்தலை விடுத்தார்.
 
இவ்வழக்கில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் சார்பில் சட்டத்தரணி சாரிக் காரியப்பரின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் ஆஜராகியிருந்தார். காரைதீவு பிரதேச சபையின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி நாராயணம்பிள்ளை ஆஜராகியிருந்தார்.
 
பள்ளிவாசல்  சார்பில்  பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனிபா பிரதி தலைவர் யூ.எல்.எம்.ஹாஷிம் மௌலவி செயலாளர் அப்துல் மஜீத் பொருளாளர் எஸ்.எம்.சலீம் உள்ளிட்டோர் விசாரணைக்காக சமூகமளித்திருந்தனர்.  காரைதீவு பிரதேசசபை சார்பில் காரைதீவு பிரதேசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் சபைச்செயலாளர் ஏ.சுந்தரகுமார் ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.
 
இதன்போது எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுவதாகவும் அன்றைய தினம் காலை ஒன்பது மணிக்கு வழக்கு விசாரணை ஆரம்பமாகும் எனவும் அன்றைய தினம் பள்ளிவாசல் சார்பான சாட்சியாளர்களை அழைத்து வருமாறும் தொடர்ச்சியாக அதே மாதம் 21 ஆம் திகதியும் விசாரணைகள் இடம்பெறும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
 
காரைதீவுவிபுலாநந்த சதுக்கத்திலுள்ள  அமைந்துள்ள காணி உரிமை கோரல் வழக்கு கடந்த வருடம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் ஊடாக தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் அதன் முதலாவது விசாரணை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்று வெள்ளிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
காரைதீவு  நிருபர் சகா

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.