மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பணியத்தின் பணிப்பாளராக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தலைவரான எஸ்.சசிகரன் நியமிப்பு

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பணியகத்தின் பணிப்பாளராக மட்டக்களப்பினை சேர்ந்தவரும்,மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் தலைவருமான ச.சசிகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது கடமைகளை கடந்த வெள்ளிக்கிழமை(6.7.2018) பொறுப்பேற்றக்கொண்டார்.

 

மட்டக்களப்ப புகையிரத வீதியில் உள்ள கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக தவிசாளர் அபூபக்கர்-அமீர்தீன்,அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை பணியக பணிப்பாளர் எஸ்.எம்.புஞ்சிபண்டார மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மட்டக்களப்ப மாவட்ட முன்பள்ளி பணியகத்தின் முன்னாள் பணிப்பாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பதவியேற்றுக்கொண்ட மட்டக்களப்ப மாவட்ட முன்பள்ளி பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ச.சசிகரன் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றியதுடன் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக தவிசாளர் அபூபக்கர் அமீர்தீன் மற்றும் முன்னாள் பணிப்பாளர் ஆகியோர் உரையாற்றினர்.

கிழக்கு மாகாணத்தில் பாலர் பாடசாலை பணியகத்தின் செயற்றிறனை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளன.

மில்கோ நிறுவனத்தின் முகாமையாளராகவும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவருமான ச.சசிகரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமூக மட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

(க.விஜயரெத்தினம்)

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.