துறைநீலாவணை சிவசக்தி சம்பியன் கிண்ணத்தை கல்முனை எவரெடி விளையாட்டுக்கழகம் வசமாக்கிக் கொண்டது

துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக்கழகத்தின் 11ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் மென்பந்து கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை கடந்த மூன்று வாரங்களாக துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் நடாத்தியிருந்தது.

இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த 37விளையாட்டுக் கழகங்களின் கிரிக்கெட் அணியினர் பங்கு பற்றினார்கள்.

இதன்போது இறுதிப்போட்டிக்கு கல்முனை எவரெடி விளையாட்டுக் கழகமும்,ஆரையம்பதி விஸ்வகலா விளையாட்டுக் கழகமும் தெரிவாகியுள்ளது.அணிக்கு 8ஓவர் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியே இவ்வாறு நடைபெற்றது.

இந்த இறுதிப்போட்டியானது ஞாயிற்றுக்கிழமை(8.7.2018) பிற்பகல் 2.00 மணியளவில் துறைநீலாவணை பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றபோது நாணச்சுழற்ச்சியில் வெற்றிபெற்ற கல்முனை எவரெடி கிரிக்கெட் அணியினர் துடுப்பெடுத்தாடி சகல ஓவர்களையும் நிறைவு செய்து 51 ஓட்டங்களை குவித்தார்கள்.

52 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆரையம்பதி விஸ்வகலா கிரிக்கெட் அணியினர் சகல விக்கட்டுக்களையும் இழந்து 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்கள்.இந்த சுற்றுப்போட்டியில் கல்முனை எவரெடி விளையாட்டுகழகத்தினர் நடுவர்களால் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணியினராக தெரிவு செய்யப்பட்டார்கள்.

இந்தப்போட்டியின் பரிசளிப்பு விழா துறைநீலாவணை பொதுவிளையாட்டு மைதானத்தில் சிவசக்தி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும்,பல்கலைக்கழக மாணவனுமான க.துஸ்யந்தன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் அதிதிகளாக ஊடகவியலாளர் க.விஜயரெத்தினம், இலங்கை இன்சுரன்ஸ் நிறுவனத்தின் விற்பனை ஆலோசகர் ரீ.சிவராஜன்,வர்த்தகர்களான கந்தமுத்து -சங்கீத்,சிவராசா-தேவப்பிரியன் ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதலாவது சம்பியன் கிண்ணத்தை கல்முனை எவரெடி விளையாட்டுக் கழகமும், இரண்டாவது சம்பியன் கிண்ணத்தை ஆரையம்பதி விஸ்வகலா விளையாட்டுக் கழகத்திற்கும் வழங்கியதோடு, ஆட்டநாயகனாக எஸ்.றுசிகரனும்,தொடராட்ட நாயகனாக கே.நிலக்ஷனும் தெரிவுசெய்யப்பட்டு கிண்ணங்களும் வங்கப்பட்டது.இவர்களுக்கு 13000,7000 பணப்பரிசுகளும் மேலதிகமாக வழங்கப்பட்டது.

tn 2

tn 2

tn 2

tn 2

tn 2

tn 2

(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க. விஜயரெத்தினம்)

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.