கூட்டுறவுத்துறையை எல்லோரும் விரும்பத்தக்க வகையில் தொழில்நுட்பம் வாய்ந்த,நிபுணத்துவமிக்க வகையில் கட்டியெழுப்பவுள்ளோம் : ரிசாட் தெரிவிப்பு

கூட்டுறவுத்துறையை எல்லோரும் விரும்பத்தக்க வகையிலும்,நிபுணத்துவம் வாய்ந்த துறையாக மாற்றியமைக்கவுள்ளோம் என வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் சனிக்கிழமை(7.7.2018)நடைபெற்ற கூட்டுறவு தினவிழாவில் கலந்து கொண்டு பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடந்து பேசுகையில்:-

இன்று அனைவரினதும் ஒத்துழைப்புடன் கூட்டுறவுத்துறையை ஒரு தெளிவான கொள்ளையுடன் கட்டியெழுப்புவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.100 வருடங்கள் பழமை வாய்ந்த துறையாக கூட்டுறவுத்துறை காணப்படுகின்றது.இக்கூட்டுறவுத்துறையில் 85இலட்சம் அங்கத்தவர்கள் இருக்கின்றார்கள்.நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையில் 40 வீதம் அங்கத்தவர்கள் காணப்படுகின்றார்கள்.நல்லாட்சி அரசாங்கம் பத்து இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.மீன்பிடி,கைத்தொழில்,சிறுகைத்தொழில்,வியாபாரம்,மீன்பிடி,விவசாயம்,சிறு முயற்சியான்மை,வங்கித்தொழில் உள்ளிட்ட வேலை வாய்ப்புக்களை ஜனாதிபதியும்,பிரதமரும் எங்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளார்கள். அவர்களுக்கு நான் நன்றிகூற கடமைப்ட்டுள்ளேன்.

இக்கூட்டுறவுத்துறை மூலம் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களும் உள்வாங்கப்பட்டுள்ளது.அதாவது பொதுமக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கே எமது வர்த்தக வாணிபத்துறை அமைச்சு அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கி முடிவு கட்டியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டை ஜனாதிபதியும்,பிரதமரும் நல்ல நிலைக்கே கொண்டு சென்றுள்ளார்கள்.சில மாகாணங்களில் கூட்டுறவுத்துறையில் கடமையாற்றும் ஊழியர்களை அவர்களின் நன்மை கருதி ஓய்வூதியத்து கொண்டு செல்லப்பட்டுள்ளது.இதனை எல்லா மாவட்டங்களிலும் உள்ள ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கும் இம்மாதத்திலிருந்து 1000 ரூபா வெகுமதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டுறவுத்துறையை எதிர்காலத்தில் நிபுணத்துவம்,தொழிநுட்பம் வாய்ந்த துறையாக மாற்றுவதற்கு மாற்றவுள்ளோம்.இக்கூட்டுறவுத்துறை உயர்த்துவதற்கு அனைத்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம் எனத் தெரிவித்தார்.

(செட்டிபாளையம் நிருபர்-க. விஜயரெத்தினம்)

அதிகம் வாசித்தவை

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

 • May 08 , 2018

  எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.