நாட்டில் உள்ள அனைவரும் மன உறுதியுப்பாட்டுடன் கூட்டுறவுத்துறைக்கு ஒற்றுமையுடன் செயற்படவேண்டும் : மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் உள்ள அனைவரும் மன உறுதிப்பாட்டுடன் கூட்டுறவுத்துறைக்கு ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.கூட்டுறவுத்துறையை சக்தி மிக்கதாக மாற்றியமைக்கவேண்டும்.

கூட்டுறவுத்துறையை அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் சிறப்பாக கவனித்து,அதனை சிந்தித்து செயற்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மட்டக்களப்பு - வெபர் மைதானத்தில் 96 ஆவது சர்வதேச கூட்டுறவுதினம் சனிக்கிழமை(7.7.2018) பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விழாவில் இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஜ்,அமைச்சர்களான ரிசாட் பதியுதீன்,பிரதியமைச்சர்களான எம்.எஸ்.எம்.அமீரலி,அலிஷாஹிர் மௌலானா,நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் ,ஸ்ரீயாணி விஜய விக்கிரசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம ,கூட்டுறவுத்துறை அதிகாரிகள்,அமைச்சுக்களின் செயலாளர்கள்,மத்தலைவர்கள்,அரச உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.இதன்போது கூட்டுறவு கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

தொடர்ந்து பேசுகையில் :-நானும் கூட்டுறவுத்துறையில் ஆரம்பகால அங்கத்தவராக இருந்து கூட்டுறவுத்துறைக்கு பணியாற்றினேன்.அதன்பின்பு அமைச்சராக இருந்து கூட்டுறவுத்துறைக்கும், நாட்டுக்கும் பங்களிப்பு செய்தேன்.நாட்டில் உள்ளஅனைவரும் கூட்டுறவுத்துறைக்கு அளப்பெரிய சேவையை ஆற்ற வேண்டும்.கூட்டுறவுத்துறையில் இருக்கின்றவர்கள் ஒருமித்த தலைமைத்துவத்துடனும்,கொள்கையுடனும் செயற்பட்டால் நாட்டின் நலன்கருதி கூட்டுறவுத்துறை முன்னேறும்.

கூட்டுறவுத்துறை நாட்டுக்கு நல்லது செய்கின்றது.கூட்டுறவுத்துறையில் இருப்பவர்கள் தங்களைப்பற்றி சிந்தித்து செயலாற்ற வேண்டும்.மனிதபிமானக் கொள்கையுடன் கூட்டுறவைக் பேணவேண்டிய தேவையாகும்.வேலைநிறுத்தம் என்று நான் சொல்லவில்லை. உண்மையாகவும்,நாட்டுக்கும் விசுவாசியாகவும் செயற்படவேண்டும் எனத்தெரிவித்தார்.

jn 2

jn 2

jn 2

jn 2

(கல்லடி நிருபர்-க.விஜயரெத்தினம்)

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.