கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 33வது வருடாந்தப்பொதுக்கூட்டம்

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 33வது வருடாந்தப் பொதுக்கூட்டம் புதன்கிழமை (04) பாசிக்குடாவில் அமைந்துள்ள எலிபன்ட் றொக் றிஸோட்டில் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தலைவர் இரா. இராஜசேகரம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம், பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி. கே.ஈ.கருணாகரன், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகப்பணிப்பாளர் கலாநிதி. எ.எஸ்.ஜெயசங்கர் மற்றும் கலை கலாசாரபீட பீடாதிபதி மு.ரவி, பதில் பதிவாளர் அ.பகிரதன், நிதியாளர் எம்.எம்.பாரிஸ், தாபனங்கள் பிரிவின் (கல்விசாரா) சிரேஷ்ட உதவிப்பதிவாளர் வி.நவிரதன் மற்றும் சிரேஷ்ட உதவிப்பதிவாளர், சிரேஷ்ட உள்ளக கணக்காய்வாளர் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர், செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகம், திருகோணமலை வளாகம் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தைச்சேர்ந்த சுமார் 450 கல்விசாரா ஊழியர்கள் பங்கேற்றனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களைப் பாராட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

கல்விசாரா ஊழியர் சங்கத்தலைவராக ஏ. ஜெகராஜு, உப தலைவராக இரா.இராஜசேகரம், செயலாளராக த.சிறிதரன், உப செயலாளராக மா.அமிர்தலிங்கம், பொருளாளராக ச.ரவீந்ரகுமார் தெரிவு செய்யப்பட்டனர்.

அடிப்படையில் 2018-2019 வருடத்திற்கான நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டதுடன், பீடங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான பிரிதிநிதிகளும் அத்துடன், கிழக்கொளி சஞ்சிகைக்குழு, கலை கலாசாரக்குழு, விளையாட்டுக்குழு போன்ற உப-குழுக்களுக்கான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

ea 2

ea 2

அதிகம் வாசித்தவை

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.