கமநல திணைக்களத்தின் நுண் நிதி நடவடிக்கை பயிற்சிச்செயலமர்வு

விவசாய அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கும் தேசிய உணவு உற்பத்திப்புரட்சி சிதமுவ மகளீர் விவசாய அமைப்புக்களின் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நுண் நிதி நடவடிக்கை தொடர்பான கமநல திணைக்கள

உத்தியோகஸ்தர்களுக்கான பயிற்சிச்செயலமர்வு சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களப் பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (05) நடைபெற்றது.

மாவட்டத்திலுள்ள 17 கமநல சேவை நிலையங்களிலுள்ள உத்தியோகஸ்தர்களுக்கு கிராம சக்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை சிறப்பாக முன்னெடுக்க விவசாயிகள் சேமிக்கும் இக்கமநல வங்கியின் முகாமைத்துவ விடயங்கள் சாதாரண கணக்கறிக்கையிடல் வரவு செலவு தனியார் கணக்கு நிதிப்பட்டியல் உபகரணப்பட்டியல் என நுண் நிதி நடவடிக்கை தொடர்பான விளக்கவுரைகள் இங்கு வழங்கப்பட்டன.

ஜனாதிபதி செயலகத்தின் தேசிய உணவு உற்பத்தித்திட்ட ஆலோசகர் ஆ.றி.கருணாரத்ன இந்நிகழ்வில் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு இப்பயிற்சி செயலமர்வை முன்னெடுத்தார்.

கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட கமநல சேவை அபிருத்தித்திணைக்கள உயரதிகாரிகள் பெரும்பாக உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தித் திட்ட ஊழியர்கள் மற்றும் விவசாய மகளீர் அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ag 1

ag 1

ag 1

எஸ்.ரி.அக்ஷயா

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.