மட்டு.மாவட்டம் விவசாய உற்பத்தியில் தன்னிறைவடையும் - பிரதி விவசாயப்பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்டம் விவசாய உற்பத்தியில் தன்னிறைவடையும் இலக்கை விரைவில் எட்டுமென தான் உறுதியாக நம்புவதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய உணவுற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு தாந்தாமலை விவசாய போதனாசிரியர் பிரதேசத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் வெவ்வேறு நிலங்களில் விளைவிக்கப்பட்ட விதை நிலக்கடலை அறுவடை விழா வியாழக்கிழமை 05.07.2018 நிலக்கடலை விவசாயியான கந்தசாமி யுகராஜின் தோட்டத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு விவசாயத்திணைக்களத்தின் முழு வீச்சிலான ஒத்துழைப்புடன் அப்பகுதி விவசாயிகள் இந்த விதை நிலக்கடலை உற்பத்தி முயற்சியை மேற்கொண்டிருந்தனர்.

பிரதேச விவசாயப் போதனாசிரியர் வடிவேல் சுரேஸ்குமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பிரதேச விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பரமேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் விதை நிலக்கடலைப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு மட்டக்களப்பு விவசாயத்திணைக்களம் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியின் காரணமாக சிறந்த நிலக்கடலை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது

மட்டக்களப்பு விவசாயத்திணைக்களத்தினதும் மாவட்ட விவசாயிகளினதும் அயராத முயற்சியினால் இந்தளவு சிறந்த விதை நிலக்கடலை உற்பத்தியை அறுவடை செய்ய முடிந்திருக்கின்றது.

இது எதிர்வரும் பெரும்போகத்திற்கான நிலக்கடலைச் செய்கைக்கான விதை நிலக்கடலைத் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும். மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலக்கடலை உற்பத்தி படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

மாவட்டத்தில் கடந்த வருடம் 750 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டு வந்த நிலக்கடலை இவ்வருடம் 1125 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டிருக்கின்றது.

தனியார்த்துறையினரால் நிலக்கடலை நியாயமான விலையில் கொள்வனவு செய்யப்படுவதாலும் சிறந்த சந்தை வாய்ப்புக்கிடைத்து வருவதாலும் எதிர்வரும் பெரும்போகத்தில் மாவட்டத்தின் நிலக்கடலை உற்பத்தி இன்னும் அதிகரிக்கக்கூடும்.

இத்தகைய முயற்சி மாவட்டத்தின் உப உணவுத்தேவையை உள்ளூரிலேயே உற்பத்தி செய்யும் தன்னிறைவைத்தரும் என எதிர்பார்ப்பதோடு விவசாயிகள் மத்தியில் ஊக்கத்தையும் அளித்துள்ளது.

இதேபேன்று, ஏனைய உப உணவுப்பயிர்களான கௌபி, உழுந்து, பயறு, சோளன், சோயா ஆகியவற்றையும் உள்ளூரிலேயே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எமது வளங்கள் அனைத்தும் வீண் விரயமாகாமல் பயன்படுத்தப்படுவதோடு, பொருளாதாரமும் மேம்படும். உள்ளூர் உற்பத்தியிலும் நம்பிக்கை ஏற்படும்.

இவ்வாறு உற்பத்திகளை அதிகரித்து வெளிநாட்டிலிருந்து வரும் இறக்குமதிகளைக் குறைக்க வேண்டும். இது தான் அரசாங்கத்தினதும் விவசாயத்திணைக்களத்தினதும் நோக்கமாகும். எனவே, நமது வளங்களிலும் நமது திறமைகளிலும் அபார நம்பிக்கை வைத்து அயராத முயற்சியில் ஈடுபட்டால் மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத்தில் தன்னிறைவு காணும்” என்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு தெற்கு வலய விவசாய உதவிப்பணிப்பாளர் மங்களகேசரி சிவஞானம், நெற்பயிருக்கான பாடவிதான உத்தியோகத்தர் எஸ். சித்திரவேல், மறுவயற்பிரிவு பாட விதான உத்தியோகத்தர் என். கணேசமூர்த்தி, விதை அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர் ஐ. ஜெயச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

pr 1

pr 1

pr 1

pr 1

எஸ்.ரி.அக்ஷயா

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.