மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு பேரணி

இந்துசமய அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கோடு இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதம்இ இந்துசமய அறநெறிக் கல்விக் கொடிதினம் ஆகியன 'இளஞ்சிறார்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு அறநெறிக்கல்வி தேவையென உணர்வீர்'

எனும் தொனிப்பொருளில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் குருபூசைத் தினமாகிய மே மாதம் 31 ஆம் திகதியை ஆரம்ப நாளாகக்கொண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தாற் தேசிய அறநெறி விழாவாக நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதில் ஓர் அங்கமாக மண்முனை வடக்கு பிரதேச செயலகமும், இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய தேசிய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு நிகழ்வானது கடந்த 17.06.2018ம் திகதி காலை 8.00மணிக்கு காந்திகிராமம் சிவனாலயத்தில் இருந்து ஆரம்பமாகி கொக்குவில் கண்ணகி அம்மன் ஆலயத்தினை அடைந்து பின்னர் சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தில் நிறைவுபெற்றது. இதன்போது காந்திகிராமம் சிவனாலய அறநெறிப்பாடசாலை, இருதயபுரம் மாணிக்கப்பிள்ளையார் அறநெறிப்பாடசாலை, கொக்குவில் அறநெறிப்பாடசாலை, சத்துருக்கொண்டான் காயத்திரி அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சறோஜினி பாலசுந்தரம், நாவற்குடா இந்துகலாசார நிலைய இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.நே.பிருந்தாபன், திருமதி.மிதுலா கமலேந்திரன் மற்றும் அறநெறிப்பாடசாலைகளின் ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

man 2

man 2

man 2

man 2

அதிகம் வாசித்தவை

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.