இந்து விவகார பிரதி அமைச்சர் பதவி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் இந்து குருமார் ஆர்ப்பாட்டம்

இந்து விவகார பிரதி அமைச்சர் பதவி காதர் மஸ்தானுக்கு வழங்கியதை கண்டித்து இந்து குருமார்கள் மட்டக்களப்பில் இன்று காலை காந்தி பூங்காவிற்கு முன்னால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்து குருக்கள்மார்கள் இஸ்லாமிய விவகார பிரதி அமைச்சராக இந்து ஒருவர் நியமிக்கப்படுவாரா? இல்லையேல் இந்து மதவிவகாரத்திற்கு இஸ்லாமிய நபர் எதற்காக? அரசாங்கமே நீதி சொல்லு நீதி நியாயங்களை கடைப்பிடி , இந்து மக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள், ஆலையத்தை அழித்தீர் நிலைத்தையும் பிடித்தீர் இனி இந்து மக்களையும் அழித்தொழிப்பீரே, உடனடியாக கொடுத்த பதவியை இரத்துச் செய் , இன்று இந்துகுருமார் வீதிக்கு செல்லவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது என பதாதைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த நியமனம் ஒட்டுமொத்த இந்து மதத்தையும் தமிழர்களையும் அவமானப்படுத்தியுள்ளீர்கள், இந்த நாட்டில் சமாதானமும் நல்லாட்சியும் இடம்பெறவேண்டும் என்பதற்காக பல்வேறு அழுத்தங்கள் மத்தியில் இந்துமக்களாகிய நாங்கள் வாக்களித்து உங்களை அரியாசனததில் அமரச் செய்தோம், இதற்கு பரிகாரமாக இந்துகலாச்சார பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்து எம்மையும் எமது மதத்தையும் அவமானப்படுத்தியுள்ளீர்கள்.

இந்த நாட்டில் இவ்வாறான செயற்பாட்டால் தான் தமிழ் மக்கள் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது இதிலிருந்து இன்னும் முழுமையாக மீட்சி பெறாத நிலையில் இனப் போராட்டத்தோடு மதப்போராட்டத்தைக் கொண்டுவந்து எமது மக்களை நிம்மதியாகவும் சமாதனமாகவும் வாழ முடியாத நிலைக்கு தள்ளியுள்ளீர்கள்.

எனவே இந்த நியமனம் குறித்து ஜனாதிபதி இந்து தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும், உடனடியாக அமைச்சர் பதவியை இரத்து செய்து ஒரு இந்து மதத்தவருக்கு வழங்கவேண்டும்.

பெளத்தசாசன அமைச்சு பதவியை ஒரு இஸ்லாமிய நபருக்கு வழங்க முடியுமா? அது நிச்சயமாக முடியாது என்பது எங்களுக்குத் தெரியும் எனவே இது எமது இந்து மதத்தையும் தமிழர்களையும் பழிவாங்கும் நிகழ்வாகவே கருதுகின்றோம் என தெரிவித்தனர்

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு சென்று அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான மகஜர் கைளிக்க சென்றனர் ஆனால் நிர்வாக சேவை அதிகாரிகளின் பணிப்பஷ்கரிப்பால் அங்கு அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர்கள் கடமைக்குவராததன் காரணத்தினால் மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் குணநாயகத்திடம் மகஜரை கையளித்து பின்னர் ஆர்ப்பாட்டகாரர் கலைந்து சென்றனர்.

gu 2

gu 2

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.