வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தினை அமைக்க நடவடிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகத்தினை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களில் சிக்குதல்,

அரசியல் அமைதியற்றமை , சிவில் பதற்றம் , பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈட்டிற்கு உரியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கான பணிகளை மிகவும் முறையாகவும் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாகவும் மேற்கொள்வதற்கு நஷ்டஈட்டை அல்லது இழப்பீட்டை வழங்குவதற்கான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டவிதிகளை தயாரிப்பதற்காக அமைச்சரவையினால் தற்பொழுது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இதற்கான திருத்தச்சட்டமூலத்தை தயாரிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான அலுவலக திருத்த சட்டத்துடன் தொடர்புபட்ட சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை தொடர்ந்து அந்த திருத்த சட்டத்திற்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.