நுன்கடன் நிறுவனங்களை தடுத்து நிறுத்தி மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை முன்னெடுக்கவும் : சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் பிரேரணை முன்மொழிவு

சம்மாந்துறை பிரதேசசபை பிரிவில் உள்ள தமிழ் கிராமங்களில் அதிக வட்டியை அறவிடும் நுன்கடன் நிறுவனங்களை தடுத்து நிறுத்தி மக்கள் நலன்சார்ந்த நல்லதிட்டங்களை முன்னெடுங்கள் என சம்மாந்துறை

பிரதேச சபை தவிசாளரிடம் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் இரா.வளர்மதி காரசாரமாக கடுந்தொனியில் குறிப்பிட்டார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் அமர்வு சம்மாந்துறை பிரதேச சபை மண்டபத்தில் செவ்வாய்கிழமை(12.6.2018) காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

அவர் தொடர்ந்து பேசுகையில் :-சம்மாந்துறை பிரதேச கிராமங்களில் இன்று நுன்கடன் வழங்கும் நிறுவனங்கள் யாருடைய அனுமதியோடு இங்கு வந்து பொதுமக்களுக்கு கடன் வழங்கிச் செல்கின்றார்கள்.இது உங்களுக்கு தெரியுமா.இதனை வறுமைப்பட்ட மக்களுக்கு ஏன் வழங்கின்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.இதனால் ஒவ்வொரு கிராமங்களிலும் வறுமைக்கோட்டின் கீழ் ஒன்றையொன்று தங்கி வாழ்கின்றவர்களுக்கும்,நிரந்தர தொழில் இல்லாதவர்களுக்கும்,முதியோர்களுக்கும் வழங்கியுள்ளார்கள்.இதனால் பல குடும்பங்கள் நிர்க்கதியாகி பாரிய கடன்சுமையோடு வாழ்கின்றார்கள்.பல குடும்பங்கள் தெரிவில் உள்ளார்கள்.பல குடும்பங்கள் பிரிந்து வாழ்கின்றது.இன்னும் சில குடும்பங்கள் உயிரை மாய்த்திருக்கின்றது.

நுன்கடன் பிரச்சனையால் பலர் தற்கொலை செய்துள்ளார்கள்.இதனால் எமது கலை,கலாச்சாரம், பண்பாடுகள் சிதைவடைந்து மூன்றாம் தரப்புள்ள சமுதாயமாக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இதனால் கல்வியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளோம்.சம்மாந்துறை தமிழ் கிராமங்களில் நுன்கடன்கள் மிகவும் வேகமாக வழங்கப்படுகின்றது.மல்வத்தை,வளத்தாப்பிட்டி,வீரமுனை,வீரச்சோலை,போன்ற கிராமங்களில் இதுவரையும் 15க்கு மேற்பட்ட நுன்கடன் நிறுவனங்கள் நுன்கடனை வழங்கியிருக்கின்றது.ஒவ்வொரு வறுமைப்பட்ட உழைப்பாளிகளின் பணத்தை அட்டை இரத்தத்தை உறிஞ்சி குடித்து நுகருவதுபோல் நுன்கடன் நிறுவனங்களும் உழைப்பாளிகளை புடித்து குடிக்கின்றது.பொதுவாக நாட்டில் உள்ள வங்கிகள்,அரச அமைப்புக்கள் கடனை வழங்கும்போது ஒருங்கிணைந்த திட்டமிடலுடன்,பொருளாதார இலக்கு நோக்கிய திட்டத்துடன்தான் கடன் வழங்கப்படுகின்றது.அதன்மூலம் பொதுமக்கள் வருமானத்தை அதிகரிக்கப்படும்.கடன் திட்டத்தை கட்டம் கட்டமாக மேற்பார்வை செய்து திட்டம் வெற்றியடையும்.இதனால் பொருளாதாரமும் சேமிக்கப்படும்.ஆனால் நுன்கடன் நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் ஓட்டையாண்டியாக உள்ளார்கள்.

இலாபம் நோக்கம் கொண்ட நுன்கடன் நிறுவனங்கள் பெண்களை வீசிப்பிடித்து விண்ணப்ப படிவங்களை கொடுத்து நாளை,நாளைமறுதினம் கடனை வழங்கின்றார்கள்.ஆனால் அரச வங்கிகளில் கடனுக்கு விண்ணப்பித்தால் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிவரும்.தவிசாளரே! வறுமைப்பட்ட குடும்பங்களின் குடும்பநிலையை சற்று சிந்தித்துப்பாருங்கள்.இலாப நோக்கோடு செயற்படும் நுன்கடன் நிறுவனங்கள் அதிக இலாபத்தை பெறுகின்றது.இதனை தடுத்து நிறுத்துவதற்கு சம்மாந்துறை பிரதேச சபை பொதுமக்களின் நன்மை கருதி காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மல்வத்தை பொதுநூலகம் சுற்றுமதில் இல்லாமல் கட்டாக்காலிகளின் உறைவிடமாக மிளிர்கின்றது.கால்நடைகள் அங்கு நுழைந்து பயிர்கள்,செடிகளுக்கும் சேதப்படுத்துவதுடன் உடமைகளுக்கும் சேதப்படுத்துகின்றது.எனவே மல்வத்தை பொதுநூலகத்திற்கு சுற்றுமதில் கட்டிக் கொடுப்பதற்கும்,திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட நூலகம் பழைய புத்தங்களுடன்தான் இன்றும் காட்சி தருகின்றது.தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இக்காலத்தில் கணினி மயப்படுத்தப்பட்ட தரமான நூலகத்தை மல்வத்தையில் அமைத்துக் கொடுக்க வேண்டும்.இவ் நூலகத்தில் பழைமையான புத்தங்களுடன்தான் இயங்கின்றது.இதுவரையும் புதிய புத்தங்களையோ அல்லது நூல்களையோ பெற்றுக்கொடுக்கவில்லை.புதிய புத்தகங்கள் பெற்றுக்கொடுக்காதால் அதிகமான மாணவர்கள் இவ்நூலகத்தை பயன்படுத்துவதில்லை.புதிய நூல்களை நூலகத்திற்கு பெற்றுக்கொடுக்க செயலாளர் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மல்வத்தை நகர்புறப் பகுதியில் பாதுகாப்பு அமைச்சினால் விடுவிக்கப்பட்ட நிலையில் அக்காணிகளில் தற்போது பற்றைக்காடுகள் வளர்ந்து, மழைநீர் தேங்கி நின்று சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் இக்காணிக்குரிய உரிமையாளர்கள் தத்தமது காணிகளை துப்பரவு செய்யவேண்டும்.சுகாதாரப்பிரச்சனை சம்பந்தமாக உரியவர்களுக்கு பிரதேச நிருவாக அதிகாரி தெரியப்படுத்தி சுற்றாடலின் ஆரோக்கியம் பேணவேண்டும்.மக்களின் சுகாதார நலனை மேம்படுத்த வேண்டும்.இக்கிராமத்தில் வீடுகள் இல்லாத காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை துப்பரவு செய்து வைக்கவேண்டும்.இதனால் காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து எங்களை பாதுகாத்து கொள்ளமுடியும் எனத்தெரிவித்தார்.

(க. விஜயரெத்தினம்)

அதிகம் வாசித்தவை

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • Apr 18 , 2018

  2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.