களுவாஞ்சிகுடியில் 07 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த முன்பள்ளி கட்டிடம் திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி தெற்கு சூறையடி பகுதியில் சுமார் 07மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த முன்பள்ளி கட்டிடம் நேற்று திங்கட்கிழமை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் திறந்துவைக்கப்பட்டது.

குறித்த முன்பள்ளியை திறப்பதற்கு இரண்டு தடவைகள் திகதிகள் நிர்ணயிக்கப்பட்டு திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதிலும் குறித்த பிரதேசத்தில் உள்ள தேசிய கட்சி அமைப்பாளர் ஒருவரின் செயற்பாடுகள் காரணமாக குறித்த கட்டிடம் திறப்பதற்கான நடவடிக்கைகள் பின்தள்ளப்பட்டு சென்றதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சூறையடி பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக குடியேற்றப்பட்ட மக்களும் குறித்த பிரதேச மக்களும் மிக நீண்டகாலமாக பல்வேறு சிரமங்களுடன் வாழந்துவருகின்றனர்.

இதன்கீழ் இப்பகுதியில் மிகவும் மோசமான நிலையில் உள்ள முன்பள்ளியிலேயே குறித்த பகுதி மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளின் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் உள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் ஊடாக 15இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி குறித்த கட்டிட நிர்மாண வேலைகள் பூர்த்திசெய்யப்பட்ட நிலையில் இதுவரையில் திறக்கப்படாத நிலையிலேயே இருந்துவந்தது.

இந்த நிலையில் இந்த கட்டிடத்தினை திறப்பதற்கு தை மாதம் குறித்த பிரதேச மக்களினால் மண்முனை தென் எருவில் பற்ற பிரதேச செயலகத்துடன் இணைந்து குறித்த கட்டிடத்தினை திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலும் குறித்த பகுதியில் இருந்த தேசிய கட்சியின் அமைப்பாளரினால் குறித்த நிகழ்வினை பிற்போடுமாறு விடுக்கப்பட்ட பணிப்புரையின் கீழ் பிற்போடப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு மேலாக எந்தவித பாவனையும் இல்லாமல் சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ள குறித்த முன்பள்ளியை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைககளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டதன் காரணமாக பிரதேச மக்கள் இணைந்து பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் குறித்த முன்பள்ளி கட்டிடத்தினை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு அதற்கான அழைப்பிதழ்களும் அச்சடப்பட்டு பகிரப்பட்டு அதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டவர்களும் நேற்று திறப்பு விழாவுக்கு வருகைதந்த நிலையில் குறித்;த நிகழ்வினை பிற்போடுமாறு குறித்த அமைப்பாளர் மீண்டும் உத்தரவிட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று அந்த நிகழ்வுக்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி வட்டார மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் வினோராஜ் நிகழ்வு பிற்போடப்பட்டதை அறிந்து குறித்த கட்டிடத்தினை திறப்பதற்கான நடவடிக்கையினை எடுத்தார்.

மாணவர்களுக்காக கட்டப்பட்ட கட்டிடத்தினை யாரும் நிறுத்திவைக்கமுடியாது என கூறி குறித்த கட்டிடத்தினை திறப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்ததுடன் இதற்கான முழு ஒத்துழைப்பினையும் பிரதேச மக்களும் மாணவர்களின் பெற்றோரும் வழங்கினர்.

இதன்போது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியனும் கலந்துகொண்டதுடன் மக்களின் பங்களிப்புடன் திறந்துவைக்கப்பட்டது.

op 2

op 2

op 2

op 2

op 2

op 2

op 2

op 2

op 2

(வா.கிருஸ்ணகுமார்)

அதிகம் வாசித்தவை

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • Apr 18 , 2018

  2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.