தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும் -அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி

தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் ஒன்று விரைவில் அமைக்கப்படும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். தோப்பூர் பிரதேச முக்கியஸ்தர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில்

திங்கள்கிழமை தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாடு முழுவதும் பல பகுதிகளில் இவ்வாறான தனி பிரதேச செயலகம் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இக்கோரிக்கைகள் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறான புதிய பிரதேச செயலகங்கள் அமைக்க முன் எல்லைநிர்ணயம் போன்ற பல விடயங்கள் செய்யப்பட வேண்டும். கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் முறையற்ற எல்லை நிர்ணயங்கள் செய்யப்பட்டுள்ளன. அவைகளை நாங்கள் திருத்தி கொண்டு வருகிறோம்.

தோப்பூர் பிரதேச செயலகம் அமைப்பது தொடர்பான ஆவணனங்கள் அனைத்ததும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகாரூபால் என்னிடம் கடந்த வருடம் சமர்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தனி பிரதேச செயலகமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். அதுவரை இந்த உப பிரதேச செயலகத்தின் மூலம் சேவைகளை பெற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபருக்கு உத்தரவு இடுகிறேன் என கூறினார்.

திருகோணமலைக்கு பிரதேச செயலக கட்டிடங்களின் திறப்பு விழாவுக்கு வந்திருந்த அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் விடுத்த வேண்டுகோளுக்கினங்க இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.