அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நிதி நிறுவனங்களில் மாத்திரம் கடனைப்பெற்றுக்கொள்ளவும்- மத்திய வங்கி ஆளுநர்

நிதி நிறுவனங்கள் மூலம் கடன்களை பெற பொது மக்கள் நாடுகின்றபோது தாம் பெறுகின்ற கடன்கள் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலம்தான் பெறப்படுகின்றதா என்று பரிசிலித்து கொண்டு கடனைப்

பெற்றுக்கொள்வது தற்போது சில பிரதேசங்களில் நிலவுகின்ற கடன் நெருக்கடி பிரச்சினைகளில் இருந்து மக்கள் தவிர்ந்து கொள்ள முடியுமென்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

கடன் பிரச்சினைகளிலிருந்து மக்கள் எவ்வாறு தணிந்து கொண்டு அக்கடனை எவ்வாறு அபிவிருத்திக்குறியதாக மாற்ற முடியுமென்பது தொடர்பிலான செயலமர்வு நேற்று திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

வாடிக்கையாளர்கள் கடனை பெறும் போது அக்கடன் குறி;த்த தகவல்களை தெளிவாக அறிய உரிமையுள்ளது. ஆவற்றை அதளிவாக அறிந்து கொள்ளல் வேண்டும். கடன் நெருக்கடியால் ஏற்படும் பிரச்சினைகளும் அதற்கான காரணம் மற்றும் தீர்வுகளை பெற்றுக்கொள்ளவே நாம் வருகை தந்துள்ளோம். அனுமதிப்பத்திரம் உள்ள நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய வங்கிக்கு காணப்படுகின்றது.

இருப்பினும் அனுமதிப்பத்திரம் இல்லாத முறையற்ற நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய வங்கிக்கு இல்லை. எனவே கடன்களை பெறுகின்றபோது அனுமதிப்பத்திரம் உள்ள நிறுவனங்களை நாடுவது தேவையற்ற பிரச்சினை மற்றும் நெருக்கடிகளில் இருந்து மக்கள் விடுபட முடியுமென்று இதன்போது மத்தி வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மத்திய வங்கியின் அதிகாரிகள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார ,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், வெளிக்கள அரச உத்தியோகத்தர்கள், பெண்கள் அமைப்புக்கள், வர்த்தக சம்மேளன பிரதி நிதிகள், சிவிலமைப்புக்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.