கல்முனையில் அரச காணிகளை ஆக்கிரமிப்பவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க விசேட குழு நியமனம்

கல்முனை பிரதேச செயலக பிரதேசத்தில் அரச காணிகளை அத்துமீறி ஆக்கிரமிப்பவர்கள் தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக ஒருங்கிணைப்புக் குழுவின் கிளைக் குழு ஒன்று மாநகர முதல்வர் றகீப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் ரசாக் ஆகியோர் தலைமையில் இன்று (24) வியாழக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜெலீல், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை, அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், ஏ.எம். றினோஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள், புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கடந்த ஆண்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் செயற்படுத்தப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு இவ்வாண்டில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் கல்முனை பிரதேச செயலக பிரதேசத்தில் அரச காணிகளை அத்துமீறி ஆக்கிரமிப்பவர்கள் தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக ஒருங்கிணைப்புக் குழுவின் கிளைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் இக்குழுவின் உறுப்பினர்களாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, கல்முனை மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜெலீல் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

அத்தோடு கல்விப் பொதுத் தராதர சாதாரன தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் கல்முனை கல்வி வலயமானது அகில இலங்கையில் 8வது இடத்தையும் தமிழ் மொழி மூலம் அகில இலங்கையில் 1வது இடத்தையும் பெற்றுள்ளது. இவ்வடைவு மட்டத்தை மேலும் அதிகரிப்பதற்கு ஏதுவாக மாதிரி பரீட்சை உள்ளிட்ட செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏதுவாக கல்வி உபகார நிதியம் ஒன்று இதன்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தின் நிதி நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களின் உதவியின் ஊடாக இந்நிதியத்திற்கான நிதி உதவிகளை பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(அஸ்லம் எஸ்.மௌலானா, அகமட் எஸ். முகைடீன்)

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.