மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யானை அடித்து 16 பேர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களில் யானை அடித்து 16 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.

இதில் 2017ம் ஆண்டு 12 பேரும் 2018 இவ்வாண்டின் இதுவரைக்குமான காலப்பகுதியில் 4 பேரும் யானை அடித்து உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2017ம் ஆண்டு யாணை தாக்கிய 26 பேர் காயமடைந்துள்ளதுடன் 76பேரின் உடமைகள் யானையினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் 72,58,861.00 ரூபா பெறுமதியான நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன.

2018 இவ்வாண்டு இதுவரைக்குமான காலப்பகுதியில் ஒரு மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் யாணையின் தாக்கத்தினால் 83 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.அதில் போரதீவுப் பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவில் 45 குடும்பங்கள் அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு 64 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, வவுணதீவு, செங்கலடி, கோறளைப்பற்று மத்தி, வாகரை, பட்டிப்பளை, வாழைச்சேனை, கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே யானையின் தாக்கம் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளாகும்.

இங்கு 408 கிலோ மீற்றர் அளவிளான மின் வேலிகள் அமைக்கப்படல் வேண்டும். அதில் 147 கிலோ மீற்றர் அளவான மின் வேலிகளே அமைக்கப்பட்டுள்ளன.

இன்னும் 261 கிலோ மீற்றர் அளவான மின் வேலிகள் அமைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.