தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதியாக கலாநிதி குணபாலன் மீண்டும் தெரிவு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதியாக கலாநிதி எஸ். குணபாலன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்பீடத்தில் பணியாற்றும் ஒரேயொரு தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் ஆரம்பகால விரிவுரையாளராக இருந்து, தன்னை அர்ப்பணித்துக் கடமைபுரிந்துவரும் கலாநிதி குணபாலன், இப்பீடத்தின் பீடாதிபதியாக கடந்தமூன்று வருட காலமாகக் கடமையாற்றி வந்தார்.

இந்த நிலையில், பீடாதிபதி பதவிக்காக இம்முறை இவரோடு போட்டியிட்ட ஏனைய இரண்டு வேட்பாளர்களும் முறையே 08, 05 வாக்குகளைப் பெற்றனர். இந்த நிலையில், இவர் 19 வாக்குகளைப் பெற்று பெருவெற்றியடைந்துள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்துக்கு இவர் ஆற்றிய அர்ப்பணிப்புக்களின் பிரதி பலிப்பாகவும், இவர்மீது பீடசபைஉறுப்பினர்கள் வைத்துள்ள அதீத நம்பிக்கையுமே, இவரின் இந்த வெற்றிக்கு பிரதான காரணமாகப் பார்க்கப்படுகிறன.

சக ஊழியர்களுடனும் மாணவர்களுடனும் சகோதரத்துவம் மற்றும் அன்புடன் பழகி, கடந்த இருபதுஆண்டுகளுக்கும் மேலாக இப்பல்கலைக் கழகத்தில் கடமையாற்றிவரும் கலாநிதி எஸ். குணபாலன்,முகாமைத்துவத்தில் முதல்தர முதுநிலை விரிவுரையாளராவார்.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் தனது முகாமைத்துவ இளமானிக் கற்கையினை நிறைவு செய்தார். பின்னர், களனி பல்கலைக் கழகத்தில் வர்த்தக முதுமானிக் கற்கையை மேற்கொண்டு இந்தியாவில் தனதுகலாநிதிப் பட்டத்தைபெற்றுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.