மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள் : அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஹிஸ்புல்லாஹ்

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக விடயப்பரப்புக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை காலை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் தேசிய நல்லிணக்க பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாஇ அரச உயர் அதிகாரிகள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, 2017ஆம் ஆண்டு மத்திய மற்றும் மாகாண அரசின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. நிறைவு செய்யப்படாத வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதன்போது பணிப்புரை வழங்கிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பணிகளை நிறைவு செய்ய நிதி தேவைப்பாடு உள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தினார்.
தான் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை நிறைவு செய்ய தேவையான நிதியை விடுவித்துள்ளதாகவும், தற்போது தான் வகிக்கும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் ஊடாக பாரிய அபிவிருத்திப் பணிகளை மட்டக்களப்பில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இதன்போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டார்.

காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழு 2017ஆம் ஆண்டு 201 வேலைத்திட்டங்களுக்காக 631.19 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.சுமார் 40அடி உயரமான வழுக்குமரத்தில் தனது கோஸ்ட்டியுடன் ஏறிய சாமித்தம்பி தவராசா(வயது 40) என்பவரே இவ்விதம் பரிதாபகரமாக மல்லாக்க வீழந்தார்.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.