மட்டக்களப்பு விவசாயிகளுக்கு மானிய உரம் கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளித்துள்ளது

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நாடளாவிய ரீதியிலுள்ள விவசாயிகள் நடாத்திய பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டவாறு சந்தையில் பெற்றுக் கொள்ளக்கூடிய மேலதிக மானிய விலைக்கான உரம் இன்று (15.05.2018)  செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பை வந்தடைந்து

விநியோகம் ஆரம்பமாகியுள்ளமை மகிழ்ச்சியளித்துள்ளதாக மட்டக்களப்பு உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத்திட்டத்தின் முகாமைத்துவக் குழுத்தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.

இது பற்றி மேலும் தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோகச்செய்கை ஆரம்பித்து ஒரு மாதத்தைக் கடந்து நெற்பயிர்கள் வளர்ந்து விட்ட நிலையில் அரசின் இலவச உரமானிய விநியோகம் ஆரம்பித்திருந்தது.

தொடர்ச்சியாக விவசாயிகள் மேற்கொண்டு வந்த அழுத்தங்களின் காரணமாக சற்றுத் தாமதமாகவேனும் இலவச உரமானியம் கிடைத்து விட்டது.

இதனிடையே. இலவச உர மானியத்துக்கு மேலதிகமாக சந்தைகளில் 1500 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ளலாம் என அரசினால் வாக்குறுதியளிக்கப்பட்ட உரத்தை உர விநியோக நிறுவனங்களிடமிருந்து பெறுவதில் விவசாயிகள் சிக்கலை எதிர்கொண்டனர்.

1500 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யும் உரத்துடன் உரத்தயாரிப்பு நிறுவனங்கள் நிர்ப்பந்திக்கும் கிருமிநாசினி, பீடைக்கொல்லி அல்லது விவசாயத்துக்கான வேறேதும் உற்பத்திப்பொருளையும் அதிக விலைக்கு வாங்க வேண்டுமென்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து அதிருப்தியுற்ற விவசாய அமைப்புக்கள் அமைச்சர் மஹிந்த அமரவீரவை நேரில் சந்தித்து இந்த விடயத்தை அவரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தன.

இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு விவசாயிகளுக்கு 1500 ரூபாவுக்கு உரத்தை மாத்திரம் உர விநியோக நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும். அதனோடு சேர்த்து வேறு தயாரிப்புக்களை வாங்க நிர்ப்பந்திக்கக்கூடாது. அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் அது குறித்து சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமென அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

அவரது பணிப்புரைக்கமைய இன்று 15.05.2018ம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் உர விநியோகஸ்தர்கள் மூலமாக குறித்த 1500 ரூபாவுக்கான மேலதிக மானிய உரத்தை விலை கொடுத்து போதியளவு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

இது இம்முறை விவசாயிகளுக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகுமென்றும் யோகவேள் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அரசாங்கம் ஒரு ஏக்கர் நெல் விவசாயத்திற்கு 5000 ரூபாவை உர மானியமாக வழங்குகின்றது. ஆகக்கூடியது ஒரு விவசாயிக்கு ஐந்து ஏக்கருக்கே உர மானியம் கிடைக்கும். தற்போது ஒரு 50 கிலோ கிராம் கொண்ட உரப்பையை 500 ரூபாவுக்கு அரசு உர மானியமாக வழங்குகின்றது.

அதேவேளை, 5 ஏக்கருக்கு மேல் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் தமக்குத் தேவையான 50 கிலோ கிராம் கொண்ட உரப்பையை சந்தையில் 1500 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்வதற்காக அரசு சலுகையளித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு சிறுபோகத்தில் சுமார் 61,280 ஏக்கர் நெற்செய்கை விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(பே.சபேஷ்) 

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.