ஆசிரியர்கலாசலையின் விரிவுரையாளராக இருந்த உலகறிந்த கல்வியலாளர் கலாநிதி கோணேசப்பிள்ளை மரணம்

மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசலைகளின் விரிவுரையாளராக இருந்த உலகறிந்த கல்வியலாளர் மண்டூரைச் சேர்ந்த கலாநிதி கோணமலை கோணேசப்பிள்ளை அவர்கள் 15 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை மரணமடைந்துள்ளார்.

இவர் சித்தவைத்தியர் ஆசிரியர் கோணாமலை அழகம்மா தம்பதியினரின் மகனாக மண்டூரைப் பிறப்பிடமாகக் கொண்டு தனது ஆரம்பக்கல்வியை மண்டூர் ஆரம்பப் பாடசாலையில் கற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து மட்டக்களப்பு சிவானந்தாப்பாடசாலையில் கற்று கணித ஆசிரியாரக இருந்து பின்னர் அட்டாளைச்சேனை மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலைகளில் விரிவுரையாளராக கடமையாற்றியிருந்தார்

இலங்கையில் பரீட்சைத்திணைக்களத்தில் பரீட்சகராகவும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிருவாக உறுப்பினராகவும் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தணிக்கைக்குழு உறுப்பினராகவும் இருந்து சேவையாற்றியதுடன் அகில இலங்கை இந்துமாமன்றம் கொழும்பு தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் திறந்த பல்கலைக்கழகத்திலும் தேசியகல்வி நிறுவகத்திலும் விரிவுரையாளராகவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராகவும் சேவையாற்றியதுடன் கொலம்பியா பல்கலைக்கழகம் இங்கிலாந்து கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராக பல ஆண்டுகள் சேவையாற்றியவர்.

அத்தோடு கணிதத்தின் இந்துக்களின் பங்களிப்பு இலங்கை பல்கலைக்கழகத்தின் கல்வி போன்ற பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுவைத்தவர்.

ff

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.