கிழக்குமாகாண தொண்டராசிரியர்களின் தெரிவு நேர்மையானது: கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கம்

நிரந்தர நியமனம்கோரி கடந்த 30வருடகாலமாக நடாத்திய போராட்டத்தின் பலனாக கிழக்கு மாகாணத்தில் 456 தொண்டராசிரியர்களின் தெரிவு அமைந்துள்ளது. நேர்முகத்தேர்வு மிகவும் செம்மையாகவும் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெற்று இந்தத்தெரிவு இடம்பெற்றுள்ளது.

எனவே எமக்கான நியமனங்களை தாமதிக்காமல் துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நல்லாட்சி அரசாங்கத்தை தாழ்மையாக வேண்டுகின்றோம்.

இவ்வாறு கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கம் நடாத்திய ஊடகமாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வூடக மாநாடு சம்மாந்துறையில் (15) செவ்வாய்க்கிழமை சங்கத்தலைவர் ஜ.எம்.பௌசர் தலைமையில் நடைபெற்றது.

அங்கு சங்கத்தின் தலைவர் ஜ.எம்.பௌசர் செயலாளர் ஏ.வகாப் அம்பாறை மாவட்டச்செயலாளர் ஏ.நௌபர் சிங்களமொழிமூல பிரதிநிதி ஏ.டி.மங்கலிக்கா ஆகியோர் கருத்துரைத்தனர்.

அவர்கள் ஊடகமாநாட்டில் தெரிவித்ததாவது:

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுமுடிந்த தொண்டராசிரியர்களுக்கான தெரிவானது எந்த அரசியல் கலப்புமற்று நேர்மையாக இடம்பெற்றுள்ளது. தகுதியானவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனங்களை துரிதமாக வழங்க இந்தநல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடந்த 9.1.2018இல் எடுக்கப்பட்ட அமைச்சரவைத்தீர்மானத்திற்கமைவாக இந்நேர்முகப்பரீட்சை நீதியாக இடம்பெற்றது. தகுதியான 456பேரின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது. தகுதியற்றவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதிலும் நியாயமான காரணங்களிருந்தால் மேன்முறையீடு செய்யலாமென ஆளுநர் கேட்டுள்ளார்.

இத்தனை வெளிப்படையாக இதயசுத்தியுடன் செயற்படும் ஆளுநர் ரோஹிதபோகொல்லாகம மற்றும் கல்விச்செயலாளர் பி.திசாநாயக்காவை பாராட்டுகின்றோம். மேலும் அமைச்சரவைத்தீர்மானத்தை எடுப்பதற்கு காரணமாயிருந்த கல்விஅமைச்சர் அகிலவிராஜ் காரியவாசத்திற்கு நன்றிகூறுகின்றோம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆணிவேர் எமது ஜனாதிபதி மைத்ரிபாலசிறிசேன பிரதம மந்திரி ரணில்விக்ரமசிங்க எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் பிரதியமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் உள்ளிட்ட அனைவரையும் நன்றியோடு பார்க்கின்றோம்.

மேலும் பல தொண்டராசிரியர்கள் கணவர் குழந்தைகுட்டிகளுடன் சமுகமளித்திருந்தனர்.

tea 2

tea 2

tea 2

tea 2

(காரைதீவு  நிருபர் சகா)

அதிகம் வாசித்தவை

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • May 08 , 2018

  எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.