பெற்றோர்களும் ஆசிரியர்களும் வழங்கும் ஒத்துழைப்பில்தான் எமது சமூகத்தை புத்திஜீவிகள் உள்ள சமுதாயமாக மாற்றமுடியும் ; மட்டக்களப்பு மாநகரசபை மேயர்

பெற்றோர்களும், ஆசிரியர்களும் வழங்கும் ஒத்துழைப்பில்தான் எமது சமுதாயத்தை புத்திஜீவிகள் உள்ள சமுதாயமாக மாற்றமுடியும் என்று மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி.சரவணபவான் தெரிவித்தார்.

கல்லடி உப்போடை விவேகானந்தா கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் "செயற்பட்டு மகிழ்வோம்"தொனிப்பொருளில் கல்லூரியின் முதல்வர் திருமதி.திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்:-இன்று கல்வியின் முக்கியத்துவம் எல்லோராலும் ஆழமாக உணரப்படுகின்றது.ஒருநாட்டின் வளர்ச்சிக்கும்,அபிவிருத்திக்கும் அத்தியவசியமான பேசும்பொருளாக கல்வி மிளிர்கின்றது.இக்கல்வியை மாணவர்களுக்கு ஊட்டுவதற்காக பாடசாலைகள் நிறுவப்பட்டு பாடசாலைகளில் கல்விச்செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.இக்கல்வியை மாணவர்களுக்கு தொடர்வதற்கு அரசாங்கம் பெருமளவு நிதிகளை செலவு செய்கின்றது.

இக்கல்வியை மாணவர்கள் பெறுவதற்கு பெற்றோர்களும்,ஆசிரியர்களும் வழங்கும் ஒத்துழைப்பில்தான் கல்வியின் அறுவடைவளர்ச்சியை பெற்றுக்கொள்ளலாம்.இக்கல்வியினாலதான் நாம் எதிர்பார்க்கும்,நமது சமுதாயம் எதிர்பார்க்கும் புத்திஜீவிகளை உருவாக்கமுடியும்.இதனால்தான் கல்வியின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது.

இன்று மாணவர்கள் கல்வியில் மட்டுமல்ல இணைப்பாட விதானச்செயற்பாடுகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் மாணவர்கள் கவனம் செலுத்தாமல் விலகிச் செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.அண்மையில் நடைபெற்ற பட்டதாரி நேர்முகத்தேர்வில் இணைப்பாட விதானச் செயற்பாடுகள்,விளையாட்டு சான்றீதழ்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே ஒவ்வொரு மாணவர்களும், கல்வியில் மாத்திரமின்றி விளையாட்டு,தகவல்தொழில்நுட்பம் உள்ளிட்ட இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு கவனம் செலுத்துவதன் மூலம் கல்வியின் மூலம்கிடைக்கும் அறுவடைவளர்ச்சி மிகப்பெரியதாகும்.உடல் உளவிருத்தியானது மாணவர்களின் கல்விவளர்ச்சிக்கும்,அறிவுசார்ந்த விடயங்களுக்கும் பயனுள்ளது.அறிவுசார்ந்த சமுதாயத்தில் புத்திஜீவிகளை உருவாக்குவதில் பெற்றோர்களும்,ஆசிரியர்களும் ஒத்துழைக்க வேண்டும் எனத்தெரிவித்தார்.

spr 4

spr 3

(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க. விஜயரெத்தினம்)

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.சுமார் 40அடி உயரமான வழுக்குமரத்தில் தனது கோஸ்ட்டியுடன் ஏறிய சாமித்தம்பி தவராசா(வயது 40) என்பவரே இவ்விதம் பரிதாபகரமாக மல்லாக்க வீழந்தார்.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.