கிழக்கு மாகாணத்தில் பெண் தலைவர்களை உருவாக்குதல் செயலமர்வு

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைப் பிரதிநித்துவப்படுத்தும் செயல் விளைவுடைய பெண் தலைவர்களை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் உள்ளுராட்சி பெண் உறுப்பினர்களின் இயலுமையைக் கட்டியெழுப்பும் நோக்கில் செயலமவர்வு அம்பாறை மொண்டி ஹோட்டலில் நடைபெற்றது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர் சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு யுசையிட் நிறுவனத்தின் அனுசரணையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜயவிக்கிரம தலைமையில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் மாநகர, நகர, பிரதேசசபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் பணிப்பாளர் சுஜீவ சமரவீர, பால்நிலை மற்றும் அனைவரையும் உட்படுத்தும் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி.துசித்தா பிலப்பிட்டிய, இந்திக்க தயாரத்ன, திருமதி.நளினி ரத்னராஜா ஆகியோர் வளவாளர்களாக பயனுறுதி வாய்ந்த செயற்பாட்டுடன் கூடிய விரிவுரைகளை வழங்கினர்.

இங்கு அரசியலில் பெண் பிரதிநிதித்துவம் பெறுவதற்காக பெண்களுக்குள்ள சவால்கள் தொடர்பாக தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் கருத்துரை வழங்கினார்.

இதன்போது மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜயவிக்கிரம உரையாற்றுகையில்-

கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி மன்ற பெண் பிதிநிதிகளில் ஒரேயொரு தவிசாளர் தெரிவு செய்யப்பட்டமை மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களுக்கு அரச பதவிகளிலான முதல் அனுபவமாக உள்ளதனால் அரச பதவிகளுடாக மக்களுக்கு நம்பிக்கையுடன் பணியாற்ற அவர்களை வலுவூட்டும் முகமாக பெண் தலைவர்களின் மென்திறன்களைப் பலப்படுத்தல் வேண்டும்.

பெண்கள் மற்றும் குறைவாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் குழுக்களின் அரசியல் பங்கு பற்றுதலைப் பலப்படுத்தல் வேண்டும். புதிதாக தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்கள் கூட்டாகச் சேர்ந்து அரசியல் சமூக விடையங்களையும் யதார்த்தங்களையும் தேசிய மட்டத்திற்கு குரல் கொடுப்பதற்கு ஆதரவு திரட்டும் ஒரு சக்தி வாய்ந்த மூலமாக இருக்க வேண்டும்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் முதல் பெண் தவிசாளரும் கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஒரேயொரு தவிசாளராகவும் பணியாற்றும் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் பணிகள் முன்னுதாரணமாக அமைய வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

amp 2

amp 2

amp 2

amp 2

 

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.