பட்டதாரிகளின் வயதெல்லையை 45ஆக உயர்த்தவேண்டும் : அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம்

பட்டதாரிகளின் வேலைவாய்ப்பிற்கான வயதெல்லையை 45ஆக உயர்த்தவேண்டும் என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.......

கடந்த 6 வருடங்கள் அரசு எந்த தொழில் வாய்ப்பினையும் வழங்க வில்லை எனவும் இதனால் பட்டதாரிகளின் வயதெல்லை கூடியிருப்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே வயதெல்லையை 45ஆக உயர்த்தவேண்டும். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பட்டதாரிகள் பல போராட்டங்கள் பல அரசியல் சந்திப்புக்கள் என தங்களின் வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்து வருகின்ற நிலையில் தங்களை நல்லாட்சி என கூறிக்கொண்டு இருக்கும் இந்த அரசு பட்டதாரிகள் விடயத்தில் இன்னும் திருப்திகரமான எந்த ஒரு விடயத்தையும் செய்யவில்லை என்பது தான் உண்மை.

அரசாங்கம் 20000 பட்டதாரிகளை உள்வாங்குவதாய் அறிவித்த போதிலும் தற்போது சுமார் 57000 பட்டதாரிகள் உள்ளனர்.

கடந்த அரசாங்கங்கள் பட்டதாரிகளின் நிலை அறிந்து அனைத்து பட்டதாரிகளையும் பட்டம் செல்லுபடியாகும் திகதி அடிப்படையில் உள்ளீர்த்திருப்பது அறிந்த விடயமே.

ஆனால் இந்த நல்லாட்சி இதுவரை காலமும் பட்டதாரிகள் உள்ளீர்த்ததற்கு மாற்றமாக ஒரு முறையை கையாண்டு (விநோதமான புள்ளித் திட்டம் )பட்டதாரிகள் வாழ்வில் விளையாடுவதனை ஏற்க முடியாது.

இந்த நல்லாட்சி எந்த வகையிலும் எமக்கு உகந்ததல்ல எனபதனை உணரமுடிகிறது.

சட்டம் மக்களுக்காகத்தான். அந்த சட்டத்தை மக்களுக்காக மாற்றுவது தவறல்ல. இதைக்கூட செய்ய வக்கத்த அரசு பட்டதாரிகளின் வயதெல்லையை மட்டுப்படுத்தி பட்டதாரிகளை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.

35 வயதைத் தாண்டிய பட்டதாரிகளின் நிலை குறித்து எந்த உறுதியான நிலைப்பாட்டையும் அரசு கூறவில்லை.

இதனால் இப்பட்டதாரிகள் தொடர்பில் அரசு சிறந்த முடிவை வழங்க வேண்டும். அத்துடன் நாங்கள் தலைவர்கள் என ஏற்றவர்கள் இதுவரைக்கும் பட்டதாரிகள் விடயத்தில் ஒரு ஆக்க பூர்வமான அறிக்கை கூட விட முடியாத அவல நிலை காணப்படுகிறது .

ஒரு வருடத்திற்கு மேலாக போராடிவரும் எங்களுக்கு இதுவரைக்கும் இந்த தலைவர்கள் என்ன ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ளார்கள் ?

நாங்கள் பல தடவை இந்த அரசியல் தலமைகளை சந்தித்து எங்கள் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் பேசுங்கள் என பல தடவை நாங்கள் வேண்டியும்

இதுவரைக்கும் இவர்கள் எங்களை கண்டுகொள்ள இவர்களுக்கு நேரம் கிடையாது .

பட்டதாரிகள் விடயத்தில் இவர்களின் செயற்பாடு ஆரோக்கியமானதல்ல. இந்த ஒரு வருட காலத்திற்குள் இந்த தலைமைகள் பட்டதாரிகள் விடயத்தில் என் பேசியிருக்கின்றார்கள் ? இந்த இக்கட்டான சூழ் நிலையில் பட்டதாரிகளுக்கு

கை கொடுக்க முடியாத இந்த தலைமைகள் இன்னும் நம்ப வேண்டுமா?? படித்த சமூகமே சிந்தித்து செயற்படுங்கள் !கடந்த அரசுகள் பின்வரும் அடிப்படையில் பட்டதாரிகளை உள்ளீர்ப்பு செய்துள்ளது இதன் அடிப்படையிலயே இந்த நல்லாட்சியும் பட்டதாரிகளை உள்ளீர்க்க வேண்டும் என எதிர்பாக்கின்றோம்

பட்டம் செல்லுபடியாகும் திகதியிலிருந்து உள்வாங்குதல் .பட்டதாரிகளின் வயதெல்லை 45 உயர்த்துதல் வேண்டும் .எச்என்டீஏ உள்ளீர்கப்படவேண்டும்.

நேர்முக தேர்வுக்கு அழைக்கப்ட்ட அனைத்துப் பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்களாகும்.

அதிகம் வாசித்தவை

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • May 08 , 2018

  எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.