வடக்கிலும் கிழக்கிலும் இறப்பர் உற்பத்தியை விரிவாக்க நடவடிக்கை

ஸ்ரீலங்காவின் இறப்பர் உற்பத்தியாகும் இடங்களைப் போன்று போன்று வடக்கு கிழக்கிலும் இறப்பர் மரச் செய்கையை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சின் ஆலோசகர் லக்ன பரனவிதான தெரிவித்தார்.

இதுகுறித்து தெரிவித்த அவர்,

“வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் இறப்பர் உற்பத்தி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவின் தெற்கு பிரதேசத்தில் 25 ஏக்கரில் தற்போது இறப்பர் செய்கை சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.” என்றார்.

இதேவேளை, வவுனியாவில் இறப்பர் உற்பத்தியை மேற்கொண்ட ஒருவர் அந்த முயற்சியில் தோல்வி கண்டுள்ளமை குறித்து தெரிவித்த அவர், ”குறித்த முயற்சியில் தோல்வியடைய என்ன காரணம் என்பதை குறிப்பிட்டு அதற்கான விளக்களை பெற்றுக் கொள்ள முடியும். 0718427076 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இறப்பர் ஆய்வு பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு இதற்கான விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், ”ஆசிய பிராந்தியத்தில் இலங்கை முக்கிய கேந்திர நிலையமாக வளர்ச்சி பெறும் என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளன. ஏதிர் காலத்தில் இலங்கை இறப்பர் உற்பத்தியில் கேந்திர நிலையமாக திகழும். அரசாங்கத்தினால் சிறு தோட்ட இறப்பர் உற்பத்திக்காக வழங்கப்படும் நிவாரண உதவி வடக்கு கிழக்கு இறப்பர் பயிர் உற்பத்திக்காக வழங்கப்படும். இத்தொழிற்துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இலாபகரமாக முன்னெடுப்பதிலும் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தியுள்ளது. ஆசியாவில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டே இம்முறை உலக இறப்பர் ஆராய்ச்சி மாநாடு கொழும்பில் நடத்தப்பட்டது.” என்றார்.

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.