கிழக்குச் செய்திகள்

கிழக்கு மாகாணத்தின் 44ஆவது விளையாட்டு விழாவில் 172 பதக்கங்களை திருகோணமலை மாவட்டம் முதலிடம்

கிழக்குமாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண கல்வி, கலாசார,விளையாட்டு துறை அமைச்சின் அனுசரணையில் நடப்பாண்டுக்கான 44 வது விளையாட்டு பெருவிழா மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

Read more ...

மைலந்தனையில் யானைகளின் அட்டகாசம் : வீடு மற்றும் பயிர்கள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மைலந்தனைக் கிராமத்தின் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து யானைகளில் தொல்லைகளால் மக்கள் பாரிய உயிர் அச்சுறுத்தலுடன் வாழ்ந்து வருகின்றனர்.

Read more ...

இலத்திரனியல் மீன் பிடி தரவு குறிப்பேடு வழங்கும் நிகழ்வு

ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டலில் சர்வதேச சந்தையில் மீன் ஏற்றுமதியை அதிகரிக்கும் திட்டத்தில் இலங்கை மீனவர்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் இலத்திரனியல் மீன் பிடி தரவு குறிப்பேடு (Ipad) ஆழ்கடல் படகுகளுக்கு வழங்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் கடல் தொழில் அமைச்சினால் இடம்பெற்று வருகின்றது.

Read more ...

கிழக்கு மாகாணத்தில் நிலவும் அதிக வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் : வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன்

கிழக்கு மாகாணத்தில் நிலவும் அதிக வெப்பத்திலிருந்து,உங்களையும்,சிறுவர்களையும் குழந்தைகளையும் காத்துக்கொள்ள வேண்டுமென களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் -சுகுணன் தெரிவித்தார்.

Read more ...

கிழக்கின் மூத்ததமிழறிஞர்வித்துவான் ஞானரெத்தினம் கனடாவில் காலமானார்

கிழக்கிலங்கையின் கிழக்கின் மூத்ததமிழறிஞர் இறுதி வித்துவான் எனக்கருதப்படும் கல்முனை பாண்டிருப்பைச்சேர்ந்த வித்துவான் கனகரெத்தினம் ஞானரெத்தினம் (வயது 84) கனடாவில் காலமானார்.

Read more ...

கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் அதிபர் தரம் ஒன்று அதிபராக தரமுயர்த்தப்பட்டார்

கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் முதல்வர் திருமதி. திலகவதி ஹரிதாஸ் அவர்கள் இலங்கை அதிபர் சேவையின் தரம் ஒன்றுக்கான(1)அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.23.11.2015 திகதி முதல் தரம் ஒன்றுக்கான அதிபராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

Read more ...

துறைநீலாவணையில் 15 நாட்களாக காணாமற்போன வயோதிபத்தாய்

துறைநீலாவணையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான வயோதிபத்தாயை கடந்த 02-07-2018 திகதி காணவில்லை என அவரது பிள்ளைகள்,உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள். காணாமற்போனது விடயமாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 4.7.2018 திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read more ...

வடகிழக்கில் காணிகள் மறைமுகமாக காணிகள் விழுங்கப்படுகின்றது.ஸ்ரீநேசன் தெரிவிப்பு

நாங்கள் இங்கிருந்து கொண்டு காணி அதிகாரத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். மறுபக்கம் வடகிழக்கு மாகாணங்களில் பல காணிகள் வனலாக, வன ஜீவராசிகள் திணைக்களங்களினாலும், மற்றும்

Read more ...

பொதுமக்களுக்கும் ,மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில்

Read more ...

மாவட்ட மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு விழா

மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் திணைக்களமும் , மாவட்ட செயலகமும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலங்களுக்கிடையில் நடத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான மாவட்ட மட்ட

Read more ...

மாகாண மட்டத்தில் மஞ்சந்தொடுவாய் பாடசாலை மாணவர்கள் முதலிடம்

மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட கரம் போட்டியில் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் மாணவர்கள் வெற்றி பெற்று மாகாண மட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுள்ளனர். 

Read more ...

நீரில் மூழ்கி 17 வயது சிறுவன் பலி : பொத்துவிலில் சம்பவம்

பொத்துவில் பசரிச்சேனையைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் இன்று மதியம் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பொத்துவில் உடகோவை பகுதிக்கு சமையலுக்காக சென்ற 17 வயதுடைய கலந்தர் அப்துல் அப்ரின் என்பவர்

Read more ...

இன்றுடன் கதிர்காமம் காட்டுப்பாதையால் 19645பேர் பக்தர்கள் பயணம் செய்துள்ளனர்

கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கான பாதயாத்திரையினை நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் மேற்கொண்டுவருகின்றனர். கதிர்காமம் கொடியேற்றம் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் ஆரம்பமாகியது.

Read more ...

கல்முனையில் இருந்து கதிர்காமத்திற்கு விசேடபஸ்சேவை ஆரம்பம்

நேற்று (10) செவ்வாய்க்கிழமை முதல் கல்முனையில் இருந்து கதிர்காமத்திற்கான விசேட பஸ்சேவை ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது என சாலைமுகாமையார் வெள்ளத்தம்பி ஜௌபர் தெரிவித்தார்.

Read more ...

1000 குளங்கள் புணரமைப்பு வேலைத்திட்டம்

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய விவசாய அமைச்சின் வழிகாட்டலில் நாட்டில் ஆயிரம் குளங்கள் புணரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட குளங்கள் புணரமைப்பு செய்வதற்கான வேலைத்திட்டம் நேற்று (வியாழக்கிழமை) நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Read more ...

சம்பூரில் 66 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் மீட்பு

திருகோணமலை - சம்பூர், எலகந்த பகுதியில் இன்று மதியம் 66 மில்லியன் ரூபா பெறுமதியான 5.5 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. எலகந்த கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மோப்ப நாயின் உதவியுடன்

Read more ...

திருமலை மாவட்ட அபிவிருத்தி திட்ட வரைபு பிரதமரிடம் கையளிப்பு

திருகோணமலை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை துரிதமாக அபிவிருத்தி செய்யும் திட்ட வரைபை சிங்கப்பூர் ஆலோசனை நிறுவனமான, சுர்பானா ஜூரோங் நேற்று (12) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தது.

Read more ...

காணாமல் ஆக்கப்பட்ட கணவனை தேடும் பெண் மீது தாக்குதல்

அண்மையில் ஜெனிவாவிற்கு சென்று திரும்பிய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் செயற்பாட்டாளரும் காணாமல் ஆக்கப்பட்டவரின் மனைவியுமான பெண் ஒருவர் மீது இனம்தெரியாத நபர்களினால் தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more ...

புல்லுமலையிலிருந்து சட்ட விரோதமாக கடத்தப்பட்ட தேக்க மரக்குற்றிகள் மீட்பு

மட்டக்களப்பு, பெரிய புல்லுமலை அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக் குற்றிகளை இன்று (12) கரடியனாறு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Read more ...

ஆசியாவின் சிறந்த சொர்கமான 10 பயண இடங்களில் அருகம்பே இடம்பிடிப்பு

ஆசியாவின் சிறந்த சொர்கமான 10 பயண இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது. அம்பாறை அருகம்பே கடற்கரையே சிறந்த சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற ‘Lonely Planet சஞ்சிகையினால் 10 சுற்றுலா பயண இடங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Read more ...

அதிகம் வாசித்தவை

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • May 08 , 2018

  எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.