அடித்து நொறுக்கிய AVENGERS: INFINITY WAR படத்தின் 2 நாள் வசூல்

அடித்து நொறுக்கிய Avengers: Infinity War படத்தின் 2 நாள் வசூல், இந்தியாவிலேயே இத்தனை கோடியா? 

Avengers: Infinity War உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. திரும்பிய பக்கம் எல்லாம் இந்த படத்தை பற்றிய பேச்சு தான் அதிகம்.

இந்த நிலையில் இப்படம் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்து வருகின்றது.

அதிலும் இந்தியாவிலேயே இரண்டு நாட்கள் முடிவில் ரூ 63 கோடி வரை இப்படம் வசூல் செய்துவிட்டது, வேறு எந்த ஹாலிவுட் படமும் இத்தகைய வரவேற்பை பெறவில்லை.

இதில் தமிழகத்தில் இப்படம் ரூ 6.5 கோடி வரையிலும் வசூல் செய்துள்ளது, மேலும், உலகம் முழுவதும் Avengers: Infinity War ரூ 1500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.