வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126வது ஆண்டு விழா சுவிஸ்லாந்து நாட்டில்

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126வது ஆண்டு விழா சுவிஸ்லாந்து நாட்டில் சனிக்கிழமை 07.04.2018 இல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. Olten நகரில் அமைந்துள்ள Kirch Trimbach, Chappeligass 39, 4632 Trimbach, Olten எனும் இடத்தில் பிற்பனல்2.00மணிமுதல் மாலை 10.00 மணிவரை நடைபெற்றநிகழ்வில் பரதநாட்டியம் உட்பட பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

 

வரவேற்புரையுடன் தலைமையுரையினை வே.ஜெயக்குமார் (சுகு ) நிகழ்த்தியதுடன் சிறப்புரையினை எழுத்தாளர் விபுலானந்தர் சம்பந்தமான உரையினையும் நிகழ்த்தினர். அத்துடன் கனடாவிலிருந்து வருகை தந்த பாபு வசந்தகுமார் விபுலானந்தரின் ஆவணப்படம் உட்பட தீர்த்தக்கரையினிலே எனும் இறுவெட்டியினையும் வெளியிட்டு வைத்தார். நெறியாள்கை இலங்கையில் இருந்து நேரலையாக சீவகன் பூபாலரெட்டினம் வழங்கினார். 

அத்தோடு சுவிஸ்நாட்டில் விபுலானந்தருக்கு முதல் முறையாக நடைபெற்ற இவ்விழாவில் லண்டன் கனடா ஜேர்மன் பிரித்தானியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் கல்விமான்கள் ஊடகவியலாளர்கள் புத்தி ஜீவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அத்தோடுஇந்நிகழ்வுக்கு படப்பிடிப்பு உட்பட அனைத்து வழிகளிலும் உதவிய அனைவருக்கும் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் வே.ஜெயக்குமார் நன்றிதெரிவித்துள்ளார்.

swiss 2

swiss 2

swiss 2

swiss 2

swiss 2

swiss 2

swiss 2