கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் கடற்கரை சிரமதானம்

கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சுகாதார தினத்தை சிறப்பிக்கும் முகமாக கல்முனை மக்கள் தமது பொழுதுபோக்கிடமாகக் கொண்டுள்ள கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் குப்பைகள் மற்றும் ஏனைய கழிவுகளை அகற்றி கடற்கரையை சுத்தமாக்கி சுகாதாரமான பகுதிகளாக்கும் சிறப்பான செயல்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்

இந்த சிறப்புப் பணியில் எமது சேனையின் இளைஞர்கள் மற்றும் ஏனைய பொது அமைப்புகள் நலன் விரும்பிகளையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்பாக அழைக்கின்றோம்.

2

நாள் - 2018.04.08 ஞாயிறு
நேரம் - காலை 06.30 முதல்
இடம் - கல்முனை முதல் பாண்டிருப்பு வரை
ஆரம்ப இடம் - கல்முனை 3 கடற்கரை கண்ணகையம்மன் ஆலயத்தில் இருந்து

தமிழ் இளைஞர் சேனை
கல்முனை பிராந்தியம்.

அதிகம் வாசித்தவை

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • Apr 13 , 2018

  மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் சட்ட விரோதமான முறையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட பெருமளவான மதுபான போத்தல்களை இன்று வெள்ளிக் கிழமை அதிகாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  இன்றும் நாளையும் மதுபான விற்பனைகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யும் வகையில் இந்த மதுபான போத்தல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

 • Feb 25 , 2018

  சர்வதேச கற்பித்தல் சிறப்புச்சாதனை (TEA) பட்டறையொன்று அமெரிக்காவிலுள்ள பல்கலைக்ககழகமொன்றில் நடைபெற்று வருகின்றது. உலகெங்கிலுமிருந்து நாடுகளைச் சேர்ந்த 21 ஆங்கில ஆசிரியர்கள் இச்சர்வதேச ஆறு வாரகால பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டுள்ளனர். இப்பட்டறை ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து மார்ச் 12ஆம் திகதிவரை நடைபெறுகிறது.

 • Apr 05 , 2018

  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களாக 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 30ஆம் தகதி வரையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் இதற்கான அழைப்புகள் பட்டதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பத்திரிகை விளம்பரங்களின் ஊடாக கடந்த 06.08.2017 முதல் 08.09.2017 வரையான ககாலப்பகுதியினுள் விண்ணப்பித்த 31.12.2016 வரை பட்டங்களைப் பெற்றுக்கொண்ட 2598 பட்டதாரிகள் இந் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.