கொக்கட்டிச்சோலை சிவன் கோயில் வருடாந்த மகோற்சவ தேரோட்ட பெருவிழா

கிழக்கிலங்கையின் பூர்வீக வரலாற்று காலம் தொட்டுதேரோடும் ஒரே ஆலயமும் இரண்டாயிரத்து அறுநூறுவருடங்கள் பழைமைவாய்ந்த தானாக தோன்றியசிவலிங்கம் அருள் பாலிக்கும் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்குபிரதேசத்தின் கொக்கட்டிச்சோலை ஊரில் கோயில்கொண்ட ஶ்ரீ தான்தோன்றீஷ்வரர் ஆலயத்தின் இவ்வருட(2018) மகோற்சவ திருவிழாவும், தேரோட்டப்பெருவிழாவும்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் (10/09/2018) திங்கள் கிழமை இரவு முழுவதும் கிராம சாந்தி பூசை ஆரம்பமாகி (11/09/2018)செவ்வாய் கிழமை

அதிகாலை 4, மணியளவில் கொடியேற்றத்துடன்உற்சவம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 09,நாட்கள்19/09/2018, வரை ஆலயத்திருவிழாக்களும்

20/09/2018, தொடக்கம் 29/09/2018 வரை பத்து பூர்வீககுடித்திருவிழாக்களும் இடம் பெற்று 30/09/2018, ஞாயிறு பி.ப4, மணிக்கு தேரோட்ட பெருவிழாவும் இடம்பெற்று அன்றுஇரவு திருவேட்டை விழாவும் மறுநாள் காலைதீர்த்தோற்சவத்துடன் இவ்வருட மகோற்சவ உற்சவபெருவிழா இனிதே நினைவுறும்.

குடித்திருவிழா விபரம்:

(1).20/09/2018,வியாழக்கிழமை, பொன்னாச்சிகுடி திருவிழா.

(2).21/09/2018,வெள்ளிக்கிழமை , திடகன் குடி திருவிழா.

(3).22/09/2018,சனிக்கிழமை சஷ்டி குடி திருவிழா.

(4),23/09/2018,ஞாயிற்றுக்கிழமை பெத்தான்குடி திருவிழா.

(5),24/09/2018,திங்கள்கிழமை கோப்பி குடி திருவிழா.

(6).25/09/2018,செவ்வாய்கிழமை கச்சிலாகுடி திருவிழா.

(7).26/09/2018,புதன்கிழமை பணிக்கொணா குடி திருவிழா,

(8).27/09/2018,வியாழக்கிழமை படையாட்சி குடி திருவிழா,

(9).28/09/2018,வெள்ளிக்கிழமை கலிங்ககுடி திருவிழா.

(10).29/09/2018,சனிக்கிழமை உலகிப்போடி குடி திருவிழா.

30/09/2018, ஞாயிற்றுக்கிழமை பி.ப 4, மணி

#தேரோட்டப்பெருவிழா.

அன்று இரவு 7, மணிக்கு திருவேட்டை விழா.

01/10/2018, திங்கள்கிழமை மு.ப 6, மணி தீர்தோற்சவம்.

#கொக்கட்டிச்சோலை சிவன் கோயில் தேரோட்டம் என்பதுஇரண்டு தேர்கள் (வினாயகர் தேர்,சித்திரத்தேர், சிவன்உமை)வடம்பிடித்து ஆண் அடியார்கள் மட்டுமேஇழுக்கும் அபூர்வமான பக்தி பரவசம் ஊட்டும் நிகழ்வாகும்.

கிழக்கு மகாணத்தில் தேரோட்டம் என்றால் அதுகொக்கட்டிச்சோலை சிவன் கோயில் என்பது வரலாற்று உண்மை.

அடியார்கள் அனைவரும் ஆலயத்துக்கு வருகை தந்தை அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகரமாம் கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஷ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா மற்றும் தேரோட்டப்பெருவிழா,திருவேட்டைவிழா அனைத்தையும் கண்டு களித்து எம்பெருமான் அருள் கடாக்சம் பெற்றேகுமாறு ஆலய வண்ணக்குமார் மற்றும் பரிபாலன சபையினர் அன்பாக அழைக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • Apr 18 , 2018

  2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.