விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளி அம்பாளுக்கு 1008 சங்காபிஷேகம்

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய கும்பாபிஷேக தின மணவாளக் கோல உற்சவ (1008) சங்காபிஷேக விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

சுவர்ணமணி இலங்கா புரியின் கிழக்கே மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் மேற்கே சைவமும் தமிழம் தழைத்தோங்கும் கலை கலாசார பாரம்பரியத்திற்கு மையமாகவும் இலங்கையில் முதல் முறையாக 6 அடி உயரத்தில் கருங்கல் திருவாசியுடன் விக்கிரகம் அமையப்பெற்ற ஒரே ஆலயமாம் விளாவட்டவான் தண்ணில் இன்பமுற அமைந்து அருளாட்சி செய்து வரும் திருவருள் மிகு ஸ்ரீ வீரமா காளியம்பாளின் கும்பாபிஷேக தின இரண்டு வருட பூர்த்தி சகங்ர (1008) சங்காபிஷேகம் நடைபெறுவதற்கு இறையருளும் குருவருளும் கை கூடியுள்ளது.

(16/06/2018) சனிக்கிழமை மாலை 7:30 மணிக்கு விநாயகர் வழிபாடு புண்ணியாக வாசனம் அனுக்ஞை வாஸ்த்து சாந்தி, சங்குஸ்தானம் என்பன நடைபெறும்.

(17/06/2018) ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசனம், யாகமண்டப பூசை, சங்கு பூசை, விசேட திரவிய கோமம், திரவிய அபிஷேகம், சகஸ்ர சங்காபிஷேகம் மற்றும் விசேட பூசையும் நடைபெற்று மகேஸ்வர பூசை, அன்னதானம் என்பன நடைபெறும்.

மேலும் இங்கு இடம்பெறவுள்ள 1008 சங்காபிஷேக வேளையில் 1008 மானிடர்களின் நாமங்களை அர்ச்சனை செய்கின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இங்கு இடம்பெறும் 1008 சங்காபிஷேக வேளையில் தாங்களும் இந்த 1008 நாமங்களில் ஒருவராக தங்களுடைய பெயரினை பதிவு செய்து அன்னை வீரம்மா காளியம்பாளின் திருவருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றனர்.

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.