வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா

இந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்டுமாநகரின் வடபால் செந்நெல் வயலும் செந்தமிழ்

மரபும் கனிகளோடு கறவையினப்பாலும் ஒருங்கே அமையப்பெற்று நல்விருந்து ஓம்பும் சீரிய சைவர் குலம் வாழும் நலன்மிகு பழம்பதியாம் வந்தாறுமூலை தனில் பன்நெடுங் காலமாக கோயில் கொண்டு அடியார்கள் குறை தீர்த்து வேண்டும் வரங்களை வாரி வழங்கும் வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் வைகாசி 10ம் நாள் (24.05.2018) வியாழக்கிழமை தசமி திதியும், உத்தர நட்சத்திரமும் கூடிய சுப வேளையில் அம்பாளின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி வைகாசித் திங்கள் 14ம் நாள் (28.05.2018) திங்கட்கிழமை பி.ப 05.00 மணிக்கு திருக்குளிர்த்தியுடன் இனிதே நிறைவுறும்.

உற்சவகால பூஜை நிகழ்வுகள் விபரம்

24.05.2018 வியாழக்கிழமை: திருக்கதவு திறத்தல் காவேரிகண்ட குடியினர்
25.05.2018 வெள்ளிக்கிழமை: பகல் பூஜை அத்தியா குடியினர்
25.05.2018 வெள்ளிக்கிழமை இரவுப் பூஜை புதூர்க் குடியினர்
26.05.2018 சனிக்கிழமை: பகல் பூஜை கவுத்தன் குடியினர்
26.05.2018 சனிக்கிழமை: இரவுப் பூஜை (திருக்கல்யாணம்) செட்டியார் குடியினர்
27.05.2018 ஞாயிற்றுக்கிழமை: பகல் பூஜை களுவத்தன் பனிக்கன் குடியினர்
27.05.2018 ஞாயிற்றுக்கிழமை: இரவுப் பூஜை மஞ்சள் பரமக் குடியினர்
28.05.2018 திங்கட்கிழமை: பகல் பூஜை (திருக்குளிர்த்தி) பெரிய பரமக் குடியினர்

vantharumoolai kannaki

எனவே அனைத்து பக்தகோடி பெருமக்களும் பக்தி சிரத்தையோடு ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தந்து கண்ணகி அம்பாளின் திவ்விய திருவருள் பெற்றுய்யுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.

ஆலய நிர்வாக சபையினர்.

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.