தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகை அம்மன் ஆலய உற்சவம்

கிழக்கிலங்கையின் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை திருக்கதவு திறத்தல் உற்சவத்துடன் பெருவிழா ஆரம்பமாகி எதிர்வரும் 29.05.2018 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடி ஆலய வருடாந்த உற்சவம் நிறைவுபெறவுள்ளது

ஆலய உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் விசேட பூசைகளும் மாலை அபிஷேக அலங்கார பூசைகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிதம்பர சாந்தரூபக் குருக்கள் தலைமையில் நடைபெறும் .

ஆலய உற்சவத்தின் 5தாம் நாள் சடங்கு 22.05.2018 செவ்வாய்கிழமை மாலை கல்யாணக் கால் வெட்டும் சடங்கு இடம்பெற்று வழமையான வீதியூடாக அம்பாள் ஊர்காவல் பண்ணும் நிகழ்வும் இடம்பெறும் .

27.05.2018 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ மிதிப்பு வைபவம் நடைபெற்று 29.05.2018 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடி அம்பாளின் வருடாந்த உற்சவம் இனிதே நிறைவுபெறும்.

IMG 7251

 

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.